பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 லா. ச. ராமாமிருதம்

பாதர் பீடா வாங்கி வழங்கினான். வில்லியம்ஸ் மறுத்துவிட்டார். மேரி அதை மென்றவுடனேயே அவள் உதடுகள் ரத்திப் பூவாகிவிட்டன. அந்தத் தனிச்சிவப்பு அவள் முகத்துக்குப் பாந்தமாக இல்லை சற்றுநேரம் கழித்துத் துப்பிவிட்டாள்.

g

هي :

வில்லியம்ஸ் சிகரெட்கூட புகைக்கவில்லை. தனக்காகப் பார்க்கிறான் என்று நினைத்துக்கொள்வதில் சுமதி பெருமை கொண்டாள். வில்லியம்ஸ் பேரில் அவளுக்கு மதிப்பு கூடிற்று.

ஒன்று பட்டது. வி ல் வி ய ம் ஸு க்கு போரிங்'காக இருந்ததோ? எனக்கு அப்படித்தானிருக்கு. இருபது நாட் களாக ஒய்ச்சல் ஒழிவில்லாமல் பிரயாணம். இதென்ன தேனிலவு? இதெல்லாம் நமக்கு சரிப்படாது. வீடு போய்ச் சேர்ந்து, நம் வீடு என்கிற சொந்தத்தில் வீட்டுக்காரியங் களைப் பார்த்துண்டிருப்பதில் இருக்கும் நிம்மதிக்கும் நிறை வுக்கும் ஈடாகுமா? வீடு போய் இறங்கின அன்றிரவே சுண்டச் சுண்ட சுண்டைக்காய் வற்றல் குழம்பும், பருப்புத் துவையலும் காண்போமான்னு ஆயிடுத்து.

ஆமாம். கலியாணத்துக்கு முன்னரே கையோடு கையாகக் குடித்தனத்துக்கு வீடு பார்த்தாயிற்று. இன்னும் வீட்டை அவள் பார்க்கவில்லை. அப்பாதான் பார்த்தார். அப்பாவுக்கு இதிலெல்லாம் கொஞ்சம் செல்வாக்கு உண்டு. துங்கம்பாக்கத்தில் ஒரு சைடு போர்ஷன். வீட்டுக்காராளும் அவர்களும் மட்டும்தான் வாடகை சற்றே சூடுதான் ஆனால் கிடைச்சதே பெரிசு என்கிற காலமாயிருக்கே!

அப்பா வீட்டை விவரிச்சதிலிருந்து, அவளுக்குக் கிடைத்த ஐடியாப்படி, கூடத்தில் காட்ரெஜ் பீரோவுக்கும் லோபா செட்டுக்கும் அவள் இடத்தைத் தீர்மானம் பண்ணி யாச்சு, ஆனால் அப்பா சொல்றதைப் பார்த்தால் படுக்கை