பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் 五 65

அறை கட்டிலே கொள்ளாது போவிருக்கே! அப்போ ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு என்ன வழி? இதுபற்றி அவரை யோசனை கேட்டால்,

நமக்கு இந்த இடமே அதிகம். டபுள் பெட் எதுக்கு. ஒண்ணே அதிகப்படி ன்னு சொல்லிட்டு, கண்ணையும் சிமிட்டி, என்னை சங்கடத்தில் மாட்டிவிடுவார். இந்த இருபது நாள் பழக்கத்திலேயே தெரியறதே, ஆள் பேச்சில் கொஞ்சம் எடக்கன்தான்.

கைச்சிற்ப தொழில் எம்போரியத்தில் அரைமணி நேரம் புகுந்து விளையாட பிரயாணிகளை அனுமதித்துவிட்டு கைடு ட்ரைவருடன் அரட்டை அடிக்க வண்டியிலேயே தங்கி விட்டான்.

அவர்கள் தந்தத்தில் ஒரு நடராஜ விக்கிரகம் வாங்கி னார்கள். ஒரு முஷ்டி உயரம் கூட இல்லை. அவளுக்கும் ஆசையாகத்தானிருந்தது. ஆனால் விலையைக் கேட்டதுமே உண்மையிலேயே மிரண்டுபோனாள். நல்லவேளை அவள் வாயைத் திறக்கவில்லை. அவர்கள் கேட்டார்கள். அவர்கள் வாங்கிக்கொண்டார்கள், அதற்கு ஆசைப்படவே ஒரு அந்தஸ்து வேண்டும்.

அவள் இரண்டு ஊதுவத்திக் கட்டுக்கள் வாங்கினாள். அதாவது அவர் வாங்கித்தந்தார், கூடவே அவர் வெள்ளைக் கல்வில் ஒரு குட்டித் தாஜ்மஹால் வாங்கினார். இதற்கு இடம் நிச்சயம் பண்ணனும், அவளுக்கு இப்பவே வீட்டுக்குப் போகவேண்டும் என்று தோன்றிவிட்டது.

பஸ் புறப்பட்டதும், கைடு பிரயாணிகளைப் பார்த்து நின்று கொண்டு...அவன் குரலே வேறு மாதிரி ஆகிவிட்டது, அதுவும் நடிப்புத் தான்.

லேடீஸ் அண்டு ஜெண்டில்மென், இப்போது உலாவின் கடைசி கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இதுவரை நீங்கள் பார்த்த காட்சிகளுக்கே சிகரம், பூலோக