பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் 187

பட்டாள். அதற்கென்ன , கட்டிப் பிடித்து இழுத்துப் போனால் மாட்டேன் என மாட்டாள். வலுக்கட்டாயமாக டி.வி. எதிரில் உட்கார்த்தி வைத்தால், கண்ணை மூடிக் கொள்ளமாட்டாள். ஆனால், வீட்டுக் காரியங்களைக் கவனித்துக்கொண்டு, அப்பப்போ வீட்டை சுத்தம் பார்த்து, சாமான்களைத் தூசி தட்டியோ, தேய்த்துத் துடைத்து: அடுக்கி அழகு பார்த்துக்கொண்டு-அதுக்கு சமானம் ஆகுமா? நான் அசல் நாட்டுப்புறம் இல்லை. ஆனால் கிராமத்து வாசனை என்னிடம் வீசினால், காரணம் என் பூர்வீகம்தான் இருக்க முடியும்.

சுமதிக்குக் கால்கள் கெஞ்சின. மற்ற மூவரும் ஆங்காங்கே தங்கித் தயங்கி ஆற அமர தாவர இயலையே அவர்களுக்குள் சுவாரஸ்யமாக அலசுவதைப் பார்த்து எரிச்சலாக வந்தது. அவள் கணவனுக்கு இத்தனை விஷயங்கள் தெரிந்திருப்பது அவளுக்குப் பெருமையாயிருந்தது, ஆச்சர்யமாயிருந்தது. பயமாக இருந்தது. இதைப் பார்த்தால் இவர் என்னிடம் என்னென்ன எதிர்பார்ப்பாரோ தெரியல்லியே! நான் இவருக்கு ஏமாற்றம் ஆகாமல் இருக்கனுமே!

உடன் நடந்துகொண்டே, ஆனால் அங்கு இல்லாமல் எண்ணங்கள், சம்பந்தமில்லாதது-( இல்லை, சம்பந்தம் உண்டா?) பிறந்த வீட்டைப்பற்றி ஓடின.

ஒரே நாளில் புகுந்த வீட்டு மனுவியா, இவாளுடைய ஹை சர்க்கிளுக்குச் சரியா மாறிவிட முடியாது. ஆமாம், நம்மைக் காட்டிலும் பசை உள்ள குடும்பமாத்தான் தோணறது. கரிசனம் பாக்கற மாதிரி தெரியல்லை. ஆனால் நாங்கள் பார்க்சாமல் முடியாது. இரண்டு தங்கைகள் கலியானத்துக்குக் காத் திண்டிருக்கா. அப்பா என் செலவி லிருந்து சுதாரிச்சுக்கறதுக்குள், மீனா தயாராகிவிடுவாள்.

அண்ணா சி. ஏ. படிக்கிறான். நன்னாப் படிக்கிறான், தினம் சந்தியாவந்தனம் பண்றான். குடும்பம் அவனைத் தான் தம்பிண்டிருக்கு. ஆச்சு, பல்லைக் கடிச்சுண்டு இன்னும்