பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置忍 லா, ச. ராமாமிருதம்

போய்விட்டான். அவனுக்குக் கோபம். இருளில் உருவக் கோடு கூடத் தெரியாமல் குரலாவே இயங்கிவிட்டுப் போய் விட்டான்.

அடுத்தாற்போலேயே, இந்து அவங்க அம்மா! பெரீய-பாம்-இல்லே பூச்சி!' ஒரு பெண் குரல் குழறிற்று.

வீட்டுள்ளே நுழையுது-அப்பா, முருகா!'

"ஐயோ என் குழந்தைகள் எல்லாம் வெளியிலே போயிருக்காளே! அவள் குரல் அழுகையில் நடுங்கிற்று. அப்பத்தான் அவருக்கு நினைப்பு வந்தது. வாசல் விளக்கைப் போடவில்லை. ஸ்விட்ச்சை’த் தட்டினால், மின்சாரம் அம்பேல் தெருவிளக்கும் பேசவில்லை. ஆனால் அது இருந்தும் ஒண்ணுதான், இல்லாமலும் ஒண்னுதான். வேலியோடுதானும் வீடுகாக்கும் பூவரச மரத்தின் இலைகள் நெருக்கமான பின்னல் கோலத்தில் வெளிச்சம் உள்ளே விழாமல் தடுத்தன.

யாரைக் கூப்பிடுவது? இந்த இருளில் யார் வருவார்கள்? எதிர் வீட்டில் ஊருக்குப் போயிருக்காக யாருக்கோ சீமந்தமாம். பக்கத்து வீட்டில் சந்தடியிருக்கு. ஆனால் எல்லாரும் உள்ளேயிருப்பா. பஜனையில் மலைக்குப் போறா.

பின் வீட்டில்-ஊஹாம். அங்கே போக, பின் வேவியில் வழி திறந்துவிட்டிருக்கு. கிணற்றடி தாண்டி இருட்டில்சரிப்படாது. நரேஷ் இன்னும் ஆபீசிலிருந்து வந்திருக்க 12ாட்டான்.

"வெள்ளிக்கிழமையும் அதுமா, இன்னும் சாமி விளக்கு கூட ஏத்தல்லையா?’ எரிந்து விழுந்தார். ஏன் பாம்பு வராது? லாந்துரை ஏத்து.'

'வீட்டில் சொட்டு சீமெண்ணைய் இல்லை. gas இன்னிக்கோ நாளைக்கோன்னு காத்துண்டிருக்கு. என்ன செய்யப்போறேனோ தெரியல்லே.’’