பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X 爱諡

யிடும்-கொத்தாய் அவர் கன்னத்துக் கதுப்பை நிமிண்டி விட்டு டாக்டர் போனார். அவரைச் சுற்றியிருந்த கும்பலும் சுருக்கவே கலைந்தது.

சேது என்ன இவ்வளவு சுருக்கில் இப்படி கசங்கிப் போயிட்டான் என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு: பேச வரல்லியே, பேசாமலே போயிடுமோ திகில் சிரித்தது. "சேது சேது அவர் கண்களில் தெரிந்த பேச்சில், சேது தாவி அவர் கைகளைத் தன் கைகளில் பற்றிக்கொண்டான்.

அப்பாவும் பிள்ளையும் கண்ணோடு கண் எந்நேரம், இந்நேரம் நீண்டதோ?

சேது பொட்டென்று உடைந்துபோனான்.

அப்பா! நான் சொன்னதை நிரூபிச்சுக் காண்பிச்சுடா தேங்கோப்பா ! எப்படியும் அந்தவேளை இப்போ வேண்டாம்பா!'

மேடை விளிம்பில் அவன் கைகளிடையுள் அவன் முகம் புதைத்து தோள்கள் குலுங்கின.

அவருக்குப் புரிந்தது. ஆனால் நீ சொன்னபடியே காரணி x என் கையிலா இருக்கிறது! என்று சொல்ல வர வில்லை. வாய்தான் அடைத்திருக்கிறதே! ஆனால் உறவின் பரிமளம் பரிணமிக்கும் வேளை இப்படித்தான் அமைவ தென்றிருந்தால், இப்படி நேர்ந்தது வீணாகவில்லை.

அவருடைய விரல்கள் அவன் தலையின் அடவியுன் புகுந்துகொண்டு மயிரைக் கோதின. விரல் நுனிகள் அன்பு சொட்டுவது தெரிந்தது. 鬱

--சுபமங்களா