பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 லா. ச. ராமாமிருதம்

ஒருநாள் காலை 19, 10-30 மணியிருக்கும். தோப்புக்கு விளையாடச் சென்றேன். எனக்கு அன்றைக்கு என்னவோ குவி; காரணம் தெரியவில்லை. நான் பொய்ப்" பூணுரல் போட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாள் ஆவணி அவிட்டம், அதை, தவறாமல் நாளைக்கு இரண்டு வேளை, சந்தனம் அரைத்துக் குழைத்து அதில் தோய்த்துப் போட்டுக் கொண்டேன், இடம் வலம்கூடத் தெரியாமல், அது நன்றாய் ஊறி, மஞ்சள் மசேலென்று, கம்மென வாசனை வீசிக்கொண்டிருந்தது...வழியில் அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொண்டே போய், கோவிலில் உட்கார்ந்து கொண்டேன்,'

கதவு திறந்திருந்தது. யாரோ, அகலில் திரியை ஏற்றிவிட்டுப் போயிருந்தார்கள். க ண் ண ம் மா வி ன் அதிர்ஷ்டம், நாயோ, எவியோ, எண்ணெயைக் குடிக்காமல் விட்டிருந்ததில், திரி சற்று நின்றே எரிந்தது... திடீரென்று "கீச் கீச்" என்று கத்திக்கொண்டே, ஒரு மூஞ்சூறு கண்ணம்மா மீது ஒடியது. அது எனக்கு ரொம்பவும் தமாஷாயிருந்தது. உஷ் உஷ்' என்று அதை விரட்டிக்கொண்டே, விக்ரஹத்தை நெருங்கினேன். அப்பொழுது என்ன நேர்ந்ததோ தெரிய வில்லை. அந்தச் சின்னஞ் சிறு அகலொளியில், கண்ணம்மா வின் முகத்தைப் பார்த்ததும், எனக்கு ஏதோ ஒருவிதமாய்ச் சந்தோஷமாயிருந்தது. செதுக்கிய அந்த வாய் என்னைப் பார்த்துச் சிரித்தது. எனக்கு என்னவோ தோன்றிற்று. சிரித்துக்கொண்டே, என் பூணுரலைக் கழற்றி விக்ரஹத்தின் கழுத்திவிட்டேன். எனக்குத்தான் அன்றைக்கு என்று மில்லாத குஷி என்றேனே!-கண்ணம்மாவின் கழுத்தில், அந்தக் கயிறு மஞ்சள் மசேலென்ற தோற்றத்துடன், கம்மென வாசனை வீசியது. அப்புறம் திடீரென்று அந்த விளையாட்டு சப்பிவிட்டது. வேறு எதிலோ கவனம் ஆழ்ந்து விட்டது. பூணுாலை எடுக்கக்கூட மறந்து, ஒடிப்போய் விட்டேன்......

  • நாட்கள் சென்றன. ஆனால் அன்று முதல், நான் வளர ஆரம்பித்துவிட்டேன். நான் சொல்வது புரிகிறதா?