பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3莎 லா, ச, ராமாமிருதம்

என்ன?- என்றேன் ஆவலுடன்.

அவளது முகத்தில் குரூரம் பொங்கியது. ஆயுளைக் கொல்லலாம்; அது தன் எல்லையை அடையுமுன், இடையில் அதை ஒடிக்கலாம்- அந்தச் சக்தி எனக்கு உண்டு" என்றாள் கண்ணம்மாள். என் உடல் நடுங்கியது: அம்மாவைக் கொல்லப் போகிறாயா?"

அவள் சலிப்புடன் புன்னகை புரிந்தாள். அவளைப் பற்றி உனக்குக் கவலையில்லை-என்னை ஏமாற்றிவிட்டு, உன்னையாளக் காத்துக்கொண்டிருக்கிறாளே-அவளைஎன்றாள். என் அடிவயிறு சுருண்டது. கண்ணம்மாகண்ணம்மா

அவள் சற்று வெறுப்புடன் என்னை நோக்கினாள்; * நீ எனக்குச் சொந்தம்’ என்றாள்.

"அப்படியானால், என்னைக் கொன்றுவிடு

உன்னைக் கொன்றால் எனக்குப் பிரயோசன மில்லை- உன் உயிர் என்னைச் சேராது- என்னிலும் மேலதிகாரிகளிடம் சென்றுவிடும்- நான் கைம்பெண்ணா வேன்-ராஜா மோசம் பண்ணினாயே!” கண்ணம்மாளின் கண்ணிர் என்மேல் விழுந்தது, என் எலும்பை உருக்கியது.

"ஒரு கணந்தான். மறுபடியும் அகங்க ரம் புகுந்து அவளை ஆட்டியது. கிளுக்கென்று வெற்றியுடன் சிரித் தாள்- சரி, நீ அவளைக் கலியானம் பண்ணிக்கொள்ஒருவழியாய் இவ்விஷயமும் தீர்மானமாக வேண்டியது தான்-ஆனால், நீ என்னிடமிருந்து தப்பமாட்டாய். இனி மேன் ரொம்பவும் கண்ணாயிருப்பேன். உன் விஷயத்தில் நீ எங்கே போய் ஒளிந்தாலும் என்னிடமிருந்து தப்பமுடி காது. உங்கள் இருவருக்கும் சரியான தண்டனை வைத் திருக்கிறேன்- கொன்றுவிடுவதில் சுவாரஸ்யமில்லைவிஷயம் சட்டென்று முடிந்துவிடுகிறது