பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇别 லா, ச. ராமாமிருதம்

ஒருநாள்-ரொம்ப ரொம்ப ஒருநாள் சொல்கிறேனோ என்னவோ, எனக்கு ஆறு வயசு இருக்குமோ என்னவோ, ஏழு வயக இருக்குமோ என்னவோ-காமுப்பாட்டி செசன் னாளே, என் தாய்-தகப்பன் செத்ததும் என்னைக் காலும் கையுமா அள்ளிப் போட்டுக்கொண்டு வந்ததாக... அப்பவோ என்னவோ? சே! ஒரு தடவை உடம்பு குலுங்கி, கண்ணி விருந்து து:சி உதிர்ந்தது:

என்மேல் அனுதாபத்தில் மரங்கள் பெருமூச்செறி கின்றன.

நான் இப்போது படுத்தியிருக்கும் நிலையில் எழுந்திருக்க மனமேயில்லை.

ஒரு கழுகு, கழுகிாக பருந்தா? என்ன வித்தியாசம் எனக்குத் தெரியும்? ஆனால் ஒரு சிறிய கன்றுக்குட்டியளவு பெரிதிருக்கும். சிறகடித்துக்கொண்டு தோப்பில் எந்த மரத் திவிருந்தோ கிளம்பிற்று. .

-அதோ, மோகாம்பரி மலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது, அங்கே எந்த உச்சாணிப் பாறை மீது அதன் கூடோ, கூட்டினுள் குஞ்சோ? குஞ்சுகளோ?

மலைமேல் மோகாம்பரி. வெள்ளியும், அமாவாசையும் சேர்ந்த அன்று அங்கு ரொம்ப விசேஷம் அன்று, இன்று வரை அடக்கியும், ஒளித்தும் வைத்திருந்ததெல்லாம், சன்னி தானம் அடைந்ததும் தலைகால் தெரியாது ஆடும்! கூந்தல் கள், ஓயாத சாமரங்கள் ஆகிவிடும். இடுப்புக்கள் மத்தாய்க் கடையும். நரம்புக்கு நரம்பு, நரம்பு தனித்தனி அடை யாளங்களுடன் துடிக்கும்.

பூசாரி கிடையாது. அவரவர் கொணர்ந்த பலிகளை அவரவரே கொடுத்து, அவரவரே பூசை செய்துகொள்வது தான், அந்த இடத்து ஐதீகம். பொங்கல் வேகும் தீக்கள், கசக்கிய கண்கள்போல் மலை உச்சியில்-சரிவில், அடிவாரத்