பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல்

இன்றோடு ரெண்டு வாரங்கள். விஜி, நீ ஏன் இன்னும் கனாவில் வரல்லே; ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துண் டிருக்கேன், ரெண்டு வாரம், பதினாலு நாளடி இனிமேல் நீ அவ்வளவுதான். அப்பிடி அப்பிடி அப்படித்தானே?

கனைப்புக் கேட்டு நிமிர்ந்தார்.

அப்போ நாளை ராத்ரி புறப்படறோம். ரிசர்வ் பண்ணியாச்சு.”

அவன் சொன்னதை வாங்கிக்கொண்டதாக அவர் விழி கவில் தெரியவில்லை.

ச! உங்களுக்கும் சேர்த்துத் தான்.”

நானா? நான் ஏன்?’’

ஆம்ப்பா.'

நான் ஏன்?’

ஆமாம்பா' இப்போ குறுக்கிட்டது அவள் உங்க ளுக்கு இனிமேல் இங்கே என்ன இருக்கு?’

கான்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே! நெஞ்சில் கோபம் இராண்டிற்று. இங்கே என்ன இல்லை? ஒருத்தி யில்லேன்னா உலகம் அஸ்தமிச்சுப் போயிடுமா? ஆனால், குரல் தழுதழுத்து விட்டது (விஜி, உலகம் அஸ்தமிச்சுத்தான் போத்தடி ஆனால், இவாளுக்கு ஏன் நம்மை விட்டுக் கொடுக்கனும்?)