பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア憂 லா ச. ராமாமிருதம்

கிடையாது. வீட்டுள் நுழைஞ்சதுமே சுவாதீமைா சாமி அலமாரியிலிருந்து சாவிக் கொத்தை எடுத்து இடுப்பில் சொருகிண்டுடுவாள். பின்ன என்ன வோய், எண்ணெய் எங்கேயிருக்கு பருப்பு எங்கேயிருக்குன்னு ஒவ்வொண்ணுத் துக்கும் உம்மைக் கேட்டுண்டிருக்க முடியுமா? உம்ம சொத்து எனக்கு வேண்டாம் வோய். என் பிள்ளை சம்பாதிக்கிறான், ஆம்படையான் விட்டுட்டுப் போன பென்ஷன் வேற இருக்கு. யார் கையும் நான் எதிர்பார்க்க வேண்டாம். ஏதோ பாவம்னு வரேன்.”

விஜி, என்னை வேடிக்கை பார்த்துட்டியேடி:

அவனோ நிலத்தை விக்க முஸ்தீபா நிக்கறான். - ஆத்துலே தண்ணியில்லே. பம்பு ஸெட்டுலே காத்து ஊதறது. நாளுக்கு நாள் குத்தகைக்காரன் வெச்சது சட்டமா யிருக்கு அவன் படி அளந்தால் உண்டு. இல்லாட்டா மண். வித்து உதறிட்டு வரதை விட்டுட்டு'ன்னு மொறு மொறுக் கறான். பெரியவாள் வெச்சுட்டுப் போன மண் ஹாசம்... நீங்க எப்படியானும் போங்கோ, என் பாகத்தைப் பிரிச் சுடுங்கோ'ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா, என்னால் தாங்க முடியுமா? அப்புறம் அப்பன் புள்ளை என்ன இருக்கு?

வகையா மாட்டிண்டுட்டேன்.

யோசனையிலேயே அரைத் துர்க்க மயக்கம். கதவுத் தட்டலில் கலைந்து எழுந்து திறந்தார்.

சிரித்தபடி, புத்தகப் பையை மார்போடு அணைத்த படி...செம்பா கோதுமைச் சிவப்பு. பசு நாக்குப் போல், அடைமயிர் நெற்றியில் சரிய... மேல் வரிசையில் ரெண்டு பல் காலி. அதுவே அவன் இளிப்புக்கு வசீகரத்தைக் கூட்டிற்று ஒரு கையை நம்பிக்கையுடன் அவர் கையுள் வைத்தான்.

  • டி செய்துட்டீங்கள்ா தாத்தா?’’