பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுக்கல் 81

இவளோடு என்ன பேச முடியும்? இந்த அளவுகூட அவர் பிள்ளையோடு பேசுவதில்லை. X

ஒருசமயம் அவன் கார்த்திக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தான். மிரட்டலும் அடியும்தான் இருந்தன. பாடம் இல்லை. பையன் மிரண்டு மிரண்டு விழிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

என்னடா, குருவி தலையிலே பனங்கா போல அவன் மேல் எவ்வளவு பாடம் ஏத்துவே?’’

இது உங்களுக்குப் புரியாது."

மூர்க்கன். என்றுமே மட்டு மரியாதை கிடையாது. ஒரளவு ஒற்றுமையாக வாழவேனுமானால் தூரத்துப் பச்சையாயிருந்தால் பிழைச்சோம். அதுவும் போச்சு எனக்கு.

விஜி என்னைக் கொடுமை பண்ணிட்டேடி உனக்கு நான் என்ன செஞ்சேன்!

வருவது அரைப் பரிட்சையா, வகுப்பு மாறும் பரிட்சையா? எப்போ வரது?

அப்பனும் ஆயியும் மாறி மாறி பையனைப் பிழிந்தெடுத் தார்கள்.

அம்மா இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தாள். அப்பா கணக்கு,

பையன் அடி வாங்கியது அம்மாவிடம்தான். ஆனால், அப்பா பார்த்த பார்வை அடியினும் கொடுமையாயிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு கறுப்பு விழி நடுநடுங்க குழந்தை கருகித் தீய்ந்துவிடுவான் போல... >

உண்மையே அதுதானோ? நாளுக்கு ஒரு இம்மியாக

இளைத்துப் போய்க்கொண்டு

6 مس . %E