பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 感乳

கொண்டிருக்கும் மருமகளுக்கு சமையலின் பக்குவத்தைப் பற்றி அரற்றிக்கொண்டேயிருப்பாள். உப்பு போட்டியா? புளியைப் போட்டியா? நல்லா கொதிக்க வை...'

சமையல் என்னவோ உருப்படியாய் இரவு ஒருவேளை தான். அதுவும் கார்த்திகை மார்கழியில் பகலில் சமைக்கக் கூட நேரமிருக்காது. வேலை அவ்வளவு மும்முரம், அடுத் தாற்போல் பொங்கல் வருகிறதல்லவா?

பையனுக்கு வென்னீர் விளாவினையா?*

இரவில் கிணற்றடியில், கொதிக்கும் வென்னீரில் உடலின் வலி தீரக் குளித்துவிட்டு, நடுமுற்றத்தில் நிலவின் வெளிச்சத்தில் வெண்கலக் கிண்ணத்துக்கெதிரில் தாயும் மகனும் உட்கார்ந்து மருமகள், சோற்றை ஆவி பறக்க வடித்து, எள்ளுத் துவையலும் ரஸ் மும் பரிமாறுகையில், ஆஹா! வெத்தல் வறுக்கச் சொன்னேனே, வறுத்தியா? மறந்துட்டியா? வறுத்திருக்கையா? பின்னே ஏன் சும்மா வெச்சிருக்கே கொண்டுவந்து வை. கொழந்தே நல்லா விருக்கா?’’

பின்னே எப்படியிருக்குமாம்?

அறையில் பாவு நூல் அடியில் படுத்துக்கொண்டு அரைத் துக்கத்தில் கண்ணயருகையில், கனவு காண்பதுபோல் வெளிச்சத்தங்கள் காதில் விழும்.

மாட்டுக்குத் தவிடு வெச்சியா? கண்ணுக்குட்டியைத் தனியாக் கட்டினையா? நேத் தி ராத்திரி நீ கட்டின லட்சனம் இன்னிக் காலையிலே கறக்கப்போனால் தாயும் கண்ணும் துள்ளி விளையாடுது, காலையிலே நம்ப பாவு நூல் ஓடுது போல இருக்குதே, கஞ்சி காய்ச்சினையா? சரி நேரமாச்சு, போய்ப் படு. பாலை எடுத்துக்கோ-அம்மாடி...”*

கிழவி தன் உடலை விசுப்பலகையில் நீட்டுகையில் பலகை நொடிக்கும்.