பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கன் பூசியஷை படிக்க வைத்தாள். படித்தான்; சரித்திரம், சங்கீதம், இலக்கியம், தத்துவம்-இவைகளின் முடிவு

வரை தெரிந்து கொண்டான்.

சின்ன கன்பூசியஸ் வருஷங் களால் வாலிபனாகவும், யோசிக்கும் பழக்கத்தால் புத்தி சாலியாகவும் இருந்தபோது, சென்ஷை இறந்து போனாள். இந்த மரணத்துக்காக கன்பூசியஸ் அழுதான். தாயின் சடலத்தை, தன் தோட்டத்தின் மேற்கு மூலையில், புஷ்பக் கொடிகள் இருந்த இடத்தில் புதைத்தான். சில காலத்துக்குப் பிறகு, தன் தகப்பனைப் புதைத்த இடத்தை, ஆப்பம் சுடும் கிழவி ஒருத்தி மூலம் கேள் விப்பட்டு, தோட்டத்தில் புதைத்த தாயின் பிரேதத்தைத் தோண்டி எடுத்து, அதைத் தன் தந்தையின் எலும்பு களோடு சேர்த்து மூடினான். என்னை உண்டாக்கிய இவர் கள் இவ்வளவு சீக்கிரத்தில் இறந்து விட்டார்களே என்று தன் குறைந்த அதிர்ஷ்டத்தை நினைத்தும் அழுதான்.

- பிறகு, ஊர் ஊராய்ச் சுற்றி னான். உலக அனுபவங்களைச் சரிவரத் தெரிந்து கொண் டான். உபதேசிக்க ஆரம்பித்தான். ஒப்புக் கொண்டவர், சிஷ்யர்கள் ஆனார்கள்.

'லூ' பட்டணத் தில் ஒரு தடவை உபதேசம் செய்து கொண்டிருந்தபோது, அரசாங் கத்தின் அழைப்பு கன்பூசியஸுக்கு வந்தது. போனான். அரசன் கொடுத்த மந்திரிப் பதவியை ஒப்புக் கொண்டான். சில மாதங்கள் கூட ஆகவில்லை. பெரிய அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விட்டான் !

- தன் சட்டங்களை எப்போதும் செருப்பாகவே வைத்திருந்தான். ஆனும், பெண்ணும் சேர்ந்து போக அவன் அனுமதிக்கவில்லை. அவன் ஆளும் நேரத்தில், தெருவில் தங்கக் கட்டி கிடந்தாலும் திருட மாட்டார்கள். வருஷாந்திரக் கூட்டங்களில் அரசனும்

16. எப்போதும் இருப்பவர்கள்