பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 2} பெருமித நம்பிக்கையால் மனப் பூரிப்போடு வீட்டில் இருக்கின்ருன். நீதி மன்றத்தின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு வந்து தனக்குச் சொல்ல தன் நண்பன் செஸானேயை அனுப்பிவிட்டு அவன் வர வுக்காக ஆவலோடு தெருவுக்கும் வீட்டுக்கும் திரிந்து கொண்டிருக்கின்ருன். - கண்டிப்பாக எஸ்டரெஸிக்குத் தண்டனைக் கிடைத் துவிடும். இப்படி பேசுகின்றனர் மக்கள். காரசாரமான விவாதம் நடைபெறுகிறது. உண்மை வெளிவந்தே தீரும் எஸ்டரெஸி குற்றமற்றவன். அந்தப் பாபி ஜோலா டிரைபஸ் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இப்படிக் கண்டபடி பத்திரிகையிலே எழுதி இவனைப் பங்கப்படுத்திவிட்டான். இப்படிப் பேசுகின்றனர், யூத எதிர்ப்பு இயக்கத்தார். ஜோலா வாங்கிய லஞ்சத்தில் பத்திரிகை ஆசிரியனுக்கும் பாதி பங்கிருக்கும் என்று பேசுகின்றனர் அந்தப் பொல்லாத இயக்கத்திலே இருந்த சில போக்கிரிகள். - சிரித்த முகம் - எஸ்டரெஸி சிரித்த முகத்தோடு நீதி மன்றத் திலிருந்து வெளியே வருகின்ருன் விடுதலே ' குற்றமற்ற வன் என்று கோர்ட்டாரால் தீர்ப்புக் கிடைத்துவிட்டது. டிரைபஸ் ஒழிந்தவன் ஒழிந்தவன்தான். இது ஒன்று தான் பெரிய கண் உறுத்தலாக இருந்தது ஜோலா" வுக்கும் சில யூதப் பேய்களுக்கும் அதையும் நீதி கவருமல் செய்து முடித்துவிட்டார்கள். " நீதி மன்றத் காரால் மூக்கறுபட்டான் ஜோலா, மூலையிலே தள்ளப் டுவான் பிகாரோ பத்திரிகையின் ஆசிரியன் இப்படி விக்காளமிடுகின்றனர் பிரெஞ்சு நாட்டுக்குப் புதை குழி வெட்டிக் கொண்டிருக்கும் வெட்டியான்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/22&oldid=759909" இலிருந்து மீள்விக்கப்பட்டது