பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எமிலி ஜோல்ா தொடரும். இதுதான் இதுவரை உன்போன்ற இள மைக்கு நாடு அளித்த பரிசு. சம்பிரதாயம், சட்டம் என்று எண்ணியதும் அதைத்தான். நான் இளைஞனுக இருந்தபோது எனக்குக் கிடைத்த வெகுமதி கண்டன மும், கேலியும் கிண்டலுந்தான். அதல்ை நான் கலங்க வில்லை. இந்தக் கொடுமைகளை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதின் மூலந்தான் ஒரு உண்மை பிறக்க முடியும். இதைப்போன்ற சோதனைக் காலங்களில் தான் அநீதி தலைதுாக்கி ஆர்பாட்டம் செய்ய முன்னே ஓடி வரும், அதைத் தடுக்க வயோதிகர்கள் முன் வரமாட்டார்கள். உன்போன்ற இளமைதான் முன் வரவேண்டும் வயோதி கன் தேய்பிறை. இளமையே! நீ வளர்பிறை. வான்ம் , உன் ஒளியை நாளுக்கு நாள் அதிக்மாக எதிர்பார்க்கிறது. ஆகவே உன் அறிவாற்றலேப் பயன்படுத்தி ஆபத்தைக் களைந்தெறிய முன்னே வா. துடுக்கர்களின் துஷ்டத்தனத். தால் துடித்துக்கொண்டிருக்கும் உன் தாய்த்திரு நாட்டைக் காப்பாற்ற ஜெயபேரிகை கொட்டி சமர்க் களத்தில் குதி. - எதற்கும் அஞ்சாத இளமையே இரும்புக் கோட் - டையை, எஃகுக் குன்றத்தை, இடம்பர்களின் நெஞ். சத்தை உன்னுல்தான் பொடிப் பொடியாக்க முடியும். உன்னிடம் பலவற்றை எதிர்பார்த்து நிற்கிறது நாடு. அதில் ஒன்று, தலைசிறந்ததும் நீதியை நிலநாட்ட வல்லதோர் சாதனே. அது உன்னிடம் நிச்சயம் இருக்கி Д5!. கொடுவாளின் பாரம் அதன் காம்புக்கல்ல. தூக்கும் கைகளுக்குத்தான். அதேபோல் உன் பேராற். றலே உன் உடல் அறியாது. இந்த நாடு அறியும். உன்னைப்போல், நானும் ஒரு காலத்தில் இருந்ததால் நானும் நன்ருக அறிவேன். ஆகவே அழைக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/27&oldid=759914" இலிருந்து மீள்விக்கப்பட்டது