பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 . எமிலி ஜோலா உந்தப்பட்டு நீதிவாளின் கூர்முனையிலே தங்களைப் பலியாக்கிக் கொள்ளவேண்டும். с தங்களுக்கு மற்ருென்றை நினைவு படுத்துவது: உண்மையான குடியரசு வாதியாகிய எனக்கு இந்த நாடு அளித்திருக்கும் சட்ட வரம்பை மீறிவிடாது என்று கருதுகின்றேன். தாங்கள் குடியரசுத் தலைவர் மாத்திரமல்ல, முதல் நீதிபதியும் தாங்கள்தான் என்பதை ஏற்கெனவே தாங் கள் அறிந்திருப்பதைக் கொஞ்சம் நினைவு படுத்து வதற்கு இந்த என் வேண்டுகோள் தூண்டுகோலா யிருக்குமென்று எண்ணுகின்றேன். ஆகையால்தான் நான் மாபெரிய பயங்கர நாசவேலைக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமென்று தங்களைக் கேட்டுக் கொள்ளு கிறேன். எந்த இடத்தில் நியாயம் கிடைக்குமோ, யார் உள்ளத்தில் நீதி குடி கொண்டிருக்கிறதோ அந்த உண்மையான தலைவரைப் பெற்றிருப்பதற்காகப் பெரு மிதமும் பூரிப்பும் அடைகிறேன். அத்தகு தலைவரும், அந்தப் பரிபூரண நீதிக்கு உரைவிடமானவரும் தாங்கள் தான் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. இவ்வளவு மாபாதகத்தை, வழிக்கஞ்சாத செயலே ஒசிே ஒரு தனி மனிதன் துணிந்து செய்திருக்கின்ருன். அவன் தான் கர்னல் பட்டி என்பவன். குற்றமில்லாத டிசை பஸ் தண்டிக்கப்படும்போது மேற்சொன்ன கர்னல் பட்டி என்பவன் ஒரு சாதாரண மனிதனுயிருந்தான். இன்று அவன் ஓர் கர்னல், அந்த உத்தியோகம் அவனுக்கு எப் படி வழங்கப்பட்டது என்பதைத் தாங்கள் விசாரிக்க வேண்டும். இவன் குற்றம் செய்தான இல்லையா என் பதை இந்த வழக்கைத் திர ஆராய்ச்சி செய்வதின் மூலத் தான் கண்டுபிடிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/33&oldid=759921" இலிருந்து மீள்விக்கப்பட்டது