பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 33 வீரத் தலைவரே வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது விருந்தினர்க்குப் பரிமாரிக்கொண்டிருப்பதைப் போல, நாடு அநியாயமாக நாசப் பாதையை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கும்போது இந்த நயவஞ்சகர்கள் நல்லவர்கள்போல் திரிந்துகொண்டிருக் கின்ருர்கள். டிரைபஸ் தலைவனுக இருந்தபோது பிரான் சின் இராணுவ முகாமிலிருந்து வெளியேறிய இரகசியக் கடிதங்களைத் தாங்கள் தாராளமாகக் காணலாம். அவைகளை வெளியேற்றியவன் கர்னல் பட்டித்ான் என் பதும், அந்தக் கையெழுத்து டிரைபஸ் என்பவனுடைய தல்ல என்பதையும் என்னுல் நிரூபிக்க முடியும். டிரை பஸைச் சிறைச்சாலையில் எழுதும்படி சொல்லி, அவ னுடைய கையெழுத்தும், ர க சியக் கடிதங்களின் கையெழுத்தும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பதைப் பார்த்து, மற்ற இராணுவத் தலைவர்கள் இதைப் பார்த்து விட்டால் எங்கே டிரைபசுக்கு விடுதலை கிடைத்து விடுமோ என்று பயந்து, இவன் சொல்வதை டிரைபஸ் இரண்டு வரிகள் எழுதிக்கொண்டிருக்கும்போதே அவசர அவசரமாக டிரைபஸ் எழுதியதைக் கலேத்துவிட்டு, இரண்டு கையெழுத்துகளும் ஒன்ருயிருக்கின்றதென்று சூழ்ச்சி செய்தவனும், இந்தக் கர்னல் பட்டிதான் என் பதை என்னுல் நிரூபிக்க முடியும். . நிரபராதி டிரைபஸ் சிறைச்சாலையில் அய்ர்ந்து துரங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென விழித்துள்தா வது உளறிக் கொட்டிவிடட்டும் என்று அவன் முகத் தில் பளிச் பளிச் என்று விளக்கை அடித்து அவனே. விழிக்கச் செய்து, ஏதாவது சொல்லிவிடுகின்ருன, அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு டிரைபலைப் பழிவாங்கி விடலாமா என்று எதிர்பார்த்து அந்தப் பெரிய முயற்சியி. லும் ஏமாந்தவன் இதே கர்னல் பட்டிதான். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/34&oldid=759922" இலிருந்து மீள்விக்கப்பட்டது