பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - எமிலி ஜோலா அருமை ஜூரர்களே ! உங்கள் காருண்ண்ய உள். ளத்தை நான் லஞ்சமாகக் கேட்கவில்லை. கடமையைக் கைவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கின்றேன். முன்பு எஸ்டரெஸியை விசாரிக்கும் போது நீங்கள் கடமையை மறந்துவிட்டீர்கள் என்பதை இந்தப் பகி. ரங்க நீதிமன்றத்தில் சொல்லவேண்டி வந்ததற்காக நான் உண்மையாகவே வருந்துகிறேன். ஒரு காலத்தில் ஜூரியாக இருந்த நான், இன்று ஜூரர்களாக வீற்றிருக் கும் உங்கள் மேல் குற்றம் சுமத்த முன்வந்திருக்கின் றேனே என்பதற்காக வெட்க்கப்படாதீர்கள். காலம் கடந்துவிடவில்லை. இன்னமும் நீதியை நிலைநாட்டி நமது பொன்ட்ைடின் பெருமையை நிலைநாட்ட் நேரமிருக்கிறது. உண்மையான குற்றவாளி எஸ்டரெஸியை நீங்கள் விசாரித்ததற்குச் சற்று முன்பு, யுத்த மந்திரி மாண்ஷெர் மெலின் அவர்களிடமிருந்து உங்களுக்கு ஒரு தாக்கிது வந்ததையும், அதில் நீங்களனைவரும் கொடியவன் எஸ்டரெஸியை விடுவிக்கும் விஷயத்தில் அதிகமாக அக்கரை செலுத்த வேண்டுமென்றும், ஆகவே அவன் விஷயமாக ஆழ்ந்து சிந்திக்காமல் சாதாரணமாக இருந்துவிட வேண்டுமென்றும் மேற்சொன்ன யத்த மந்திரி மெலின் அவர்கள் அனுப்பிய தாக்கிதைப் பார்த்துப் பயந்து சும்மா இ ரு த் து வி ட் டி.ர் க ள்எஸ்டரெஸி தான் உண்மையான குற்றவாளி என்பதற் கான பல ஆதாரங்கள் இருந்தும், நீங்களனைவரும் ஒரு யுத்த மந்திரிக்குப் பயந்து, அநியாயத்தின் பலி பீடத்தில் இறந்துவிட்ட சவம்போல் இருந்துவிட்டீர் கள், என்ற இந்த ரகசியத்தைப் பகிரங்க நீதிமன்றத் தில் தைரியமாக வெட்டவெளிச்சமாக்குகின்றேனே என்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/49&oldid=759938" இலிருந்து மீள்விக்கப்பட்டது