பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 49 பதற்காக வருந்தாதீர்கள். வேதனையால் வெட்கப்படா தீர்கள். நடந்தது நடந்துவிட்டது. இனியாகிலும் நியாயத்தின் பக்கம் உங்கள் காதுகளைத் திருப்புங்கள். யாருக்கும் அஞ்சாமல் வீற்றிருக்க வேண்டிய நீங்கள் சாதாரண கற்சிலேபோல் காட்சியளித்திர்கள். அதற். காகக் கவலைப்படாதீர்கள். இனியாகிலும் உங்கள் கீர்த்தி, வரலாற்றின் வஞ்சனவரிகளில் மறைக்கப்படா திருக்குமாக. அருமை நண்பர்களே ! பல நாட்களுக்கு முன்பு பட்டாளத் தலைவர்களிள் வன்மையால் புதைக்கப்பட்ட உண்மை எப்படி எனக்குத் தெரிந்துவிட்டது என்ப தையே ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு ஆற்ற முடியாத கோபத்தால் வீற்றிருக்கின்றீர்கள். ஆறுதல் கொள்ளுங் கள். மனித வர்க்கம் குற்றமுடையதுதான். அதற்காக நான் வருந்தவில்லை. ஆல்ை அந்தக் குற்றங்களைத் திருத்தும் பெருமைக்குரிய பீடத்தில் கம்பீரமாக வீற் றிருக்கும் நீங்கள் ஒரு இராணுவ மந்திரியால் சாதாரண ம்க்களாக்கப்பட்டு விட்டீர்களே என்பதை எண்ணிச் சஞ்சலப்படுகின்றேன். இதோ என்ன்ப் பாருங்கள். என் கலங்கமற்ற முகத்தைப் பாருங்கள். நீதியின் வெளிச்சத்தில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து உங்கள் முன்நிறுத்தி, கண்ணிரும் கம்பலேயுமாகக் கட லின் நடுவே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கண்ணிய புருஷனே விடுவித்து நாட்டின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தால் நிற்கும் இந்த ஏழையைப் பாருங்கள். உங்களைத் தொல்லே தருவதற்காக என்னப் பெரி தும் மன்னிக்கவேண்டும். சாட்சிகள் எவ்வளவு பயந்து போனுலும், ஒரு சிறிய சாட்சியத்தைக்கூட விட்டு 4 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/50&oldid=759940" இலிருந்து மீள்விக்கப்பட்டது