பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'60 எமிலி ஜோலா ஜோலா : நான் விட்டு வந்த வேலையை நாடு பார்த்துக் கொள்ளாதா? ... • - - செலானே : நாடுதான் நின்றபடியே தூங்கிக்கொண் டிருக்கின்றதென்று முன்பு பிகாரோவில் எழுதி யிருந்தாயே. அதை இதற்குள் மறந்து விட்டாயா? ஜோலா : அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? செஸ்ா நீ வெளியே வர வேண்டும். உன்னை நம்பி இருக்கிற மேத்யூ டிரைபஸ், மேடம் டிரைபஸ் ஆகி யோருக்கு ஆறுதலைத் தந்து, டிரைபசுக்கு நிரந்தர. மான விடுதலேயைத் தேடித்தர வேண்டும். ஜோலா. அந்த நாடகத்தைத்தான் முடித்துவிட்டார் களே. - - செஸ்ா : அவர்கள் நாடகத்தைப் பாதியிலே முடித்து விட்டால் நாம் கொட்டகையை விட்டு வெளியே வந்து விடுவதா? ஜோலா : கொட்டகையிலிருந்து எல்லோரும் எழுந்து போகும்போது. செஸ்ா : நாமும் எழுந்து சென்றுவிடுவதா? அப்படி எழுந்துச் செல்பவர்கள் எல்லாம் நாடகம் இவ் வளவுதான் என்று எண்ணுபவர்கள். நாடகம் இன்னும் முடியவில்லே என்று நமக்கு நன்ருகத் தெரியுமே. அப்படியிருக்க நாம் ஏன் எழுந்து செல்லவேண்டும். - ஜோலா நமக்காகவா நாடகத்தை நடத்துவார்கள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/61&oldid=759952" இலிருந்து மீள்விக்கப்பட்டது