பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 61 செஸ்ா: ஆம் நமக்காகத்தான் இவ்வளவு நேரமாகி லும் நாடகத்தை நடத்தினர்கள். எஸ்டரெஸியை விசாரித்தது, உன்னே விசாரித்தது எல்லாம் உன் பொருட்டு நடத்தப்ப்ட்ட நாடகந்தான். இனி யும் ஏதாவது நாடகத்தில் விடப்பட்ட பகுதி நடை பெற வேண்டுமென்ருல் அதுவும் உன் எழுத்துக் களுக்காகத்தான். - ஜோலா : அந்த மிகுதியான நாடகக் கட்டத்திலும் உண்மை வெளியாகாவிட்டால் ? செலா! நீ உண்மைக்காகப் போராடுகிறேன் என்று சொல்கிருயல்லவா ? ..یہ - - ஜோலா : ஆமாம். செலா : அப்படியானுல், நிச்சயம் உண்மை வெளி வந்தே திரும். இந்த நாடகத்துக்கு எவ்வளவு பலமான ஒத்திகைகள் நடந்திருந்தாலும் எந்த நடிகனுவது உண்மையை மேடையில் சொல்லிவிடப் போகின்றன். இந்த நாடகத்தைக் கற்பிதம் செய்த எஸ்டரெஸி என்ற போலி நாட்காசிரியன் திரு இரு வென விழிக்கப் போகின்ருன். ஆல்ை அவ்வளவும் செய்து வைக்க நீ வெளியே இருக்க வேண்டும். ஜோலா : இப்போதே, சட்டத்தை மீறினேன் என்று குற்றஞ் சாட்டியிருக்கின்ருர்கள். மறுபடியும் சிறையி லிருந்து தப்பிவிட்டேன் என்ற இரண்டாவது குற்ற மும் சேரவேண்டுமா ? - . . செலா உடல் ஒருதரம் நனையும்வரைதான். குளிர். பிறகு எத்தனே முழுக்குகள் போட்டாலும் குளிர் தெரியாதே. அதேபோல் ஒரு குற்றத்தைத் தாங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/62&oldid=759953" இலிருந்து மீள்விக்கப்பட்டது