பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 என்று எஸ்.டி.எஸ்ஸைப் பார்த்துக் கொண்டேபேச ஆரம்பித்து விட்டார். ராமநாதனோ ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கி எதிர்த் தாற்போல் வைத்துக்கொண்டு, 'நாடகத்தை இங்கேயே நடத்த ஆரம்பித்துவிடுவோமா?' என்றார். 'நாடகம் எதற்கு? எங்கிருந்தோ வந்தான்' என்ற பாரதி பாடலைப் பாடுங்கள்; அதற்குள் வெள்ளம் வடிந்து விடும்!"என்றார் எஸ்.டி.எஸ். இரவு ஒன்பது மணிக்கு நாடகம். மணிபத்தும் ஆயிற்று; வெள்ளம் வடிந்த பாடாயில்லை. 'இதற்கு மேல் வெள்ளம் வடிந்தாலும் நாம் அங்கே போய் எப்படி நாடகத்தை நடத்தமுடியும்? இன்னொரு நாளைக்கு ஒத்திவைத்துக் கொள்வோமே!"என்றார் ராமநாதன். 'நாமோ பத்துப் பன்னிரண்டு பேர்; நமக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களோ ஆயிரக்கணக்கான பேர். அவர்களுடைய செளகரியத்தை நாம் கவனிப்பதா? நம்முடைய செளகரியத்தை அவர்கள் கவனிப்பதா?” என்றார் பாகவதர். 'அப்படியானால்... 'என்று இழுத்தார் எஸ்.டி.எஸ் “எப்படியும் இன்றிரவு நாடகத்தை நடத்தியே ஆகவேண்டும். நம்மால் விளாத்திகுளம் சுவாமிகளுக்கும் நஷ்டம் வரக்கூடாது; நாடகத்தை எதிர்பார்த்துக் காத்திருக் கும் மக்களுக்கும் கஷ்டம் வரக்கூடாது' என்றார் பாகவதர். அவர் வழிபட்டு வந்த முருகனின் அருளாலோ என்னவோ, கிட்டத்தட்ட ஒரு மணிக்கு வெள்ளம் வடிந்தது. இக்கரையிலுள்ள இவர்களுக்கு உதவுவதற்காக அக்கரை யிலிருந்து இருபது இருபத்தைந்து பேர் கைகளில் நீண்ட கழிகளுடனும், காஸ் லைட்டு'களுடனும் ஒரு மொட்டை மாட்டுவண்டி ஒட்டிக்கொண்டு வந்தார்கள். அந்தவண்டி கொண்டமட்டும் பெண்களையும் வயதான சிலரையும்