பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 னார்கள்; ரசித்தார்கள். சொல்லப்போனால் 'பாகவதர் அவர்களே தலையாட்டுகிறார்; ரசிக்கிறார்; ஆமோதிக் கிறார்; நாமும் ரசிக்கத்தான் வேண்டும்' என்பதுபோல் இருந்தது அது. இரண்டொரு பாடல்களைக் கேட்டு ரசித்தபிறகு, மக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்வதற்காகப் பாகவதர் அவர்கள் எழுந்து போனார்கள். நான் அப்போது என்ன நினைத்தேனோ, அதை இப்போது அப்படியே எழுதுகிறேன். அங்கே எத்தனையோ விளக்குகள் போடப்பட்டிருந் தாலும், பாகவதர் அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் ஏதோ ஓர் இருள் கப்பிக்கொண்டதுபோல் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல; அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் தோன்றியது. பொன் நிறமான மேனி: பொன்நிறமுள்ள சட்டை, கழுத்தைச் சுற்றிச் சரிகை மட்டும் தெரியும் மேல்வேட்டி; காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள். நெற்றியில் சவ்வாதுப்பொட்டு; தலையில் அழகான சுருண்டமுடி. இவை அத்தனையும் தங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட ஒர் உருவத்தில் வைரங்கள் பதித்ததுபோல் காட்சியளித்தன. சுருங்கச் சொல்லப்போனால், தங்கத்தாலான ஓர் உருவம் உயிர்பெற்று வருவது போலவே இருந்தது அது. பாகவதர் அவர்கள் அன்று அந்தக் கூட்டத்தை விட்டுப் போனதும் அந்த இடத்திலும், தங்கள் மனத்திலும் இருள் கப்பியது போலவே மக்கள் உணர்ந்தார்கள்.” நடிகர் சொன்னதைக் கேட்டீர்களா? இதோ, டைரக்டர் சோமு சொல்வதைக் கேளுங்கள்: 'பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்; பாகவதர் உடுமலைபேட்டைக்கு வந்திருந்தார். அந்த ஊரில் 'ஊர்க் கவுண்டர் என்பவர் பிரபலமான ஒரு செல்வந்தர்.