பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 எல்லாம் சிவன் செயல் என்றெண்ணி... பாகவதரின் எட்டாவது படம் 'சிவகவி. தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற பொய்யாமொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்றுக்குத்தான், அதைத் திரைக்கதையாக்கி வசனம் எழுதிய திரு இளங்கோவன் 'சிவகவி என்று பெயர் வைத்திருந்தார். ஏற்கனவே பல வெற்றிப் படங்களை எடுத்து வெளியிட்டிருந்த கோவை பட்சி ராஜாபிலிம்ஸார் இதையும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். பாகவதரின் வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொண்ட திரு எஸ். எம்.பூரீராமுலு நாயுடு இதை டைரக்ட் செய்திருந்தார். அந்த நாள் திரையுலகத் தாரகையான டி.ஆர்.ராஜகுமாரி பாகவதருடன் முதன் முதலாக நடித்த படம் இதுவே, ஆனால் கதாநாயகியாக அல்ல; சோழ நாட்டுப் புலவர் பெருமக்கள் குழுவைச் சேர்ந்த வஞ்சியாக. ராஜா சர் அண்ணாமலை செட்டியார், திரு ஆர்.கே.சண்முகம் செட்டியார், திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார், திரு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து அப்போது தமிசையை வளர்த்துக்கொண்டிருந்த பாகவதர், இந்தப் படத்தில், “ தமியேன் பைந்தமிழ் அன்னையின் பாலருந்தித் தமிழ்ப் பாலன் தமிழ் வளர உயிர் வாழும் ஊழியனென் றுலகறியும்..." என்று பாடித் தமிழையும் வளர்த்தார். இதற்குப் பின் ஒன்பதாவது படமாக வந்து, ஏறக்குறைய ஆயிரம் நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடியபடம் 'ஹரிதாஸ். பாகவதரின் வாழ்க்கையில் பல திருப்பங்களை உண்டாக்கி வைத்த படமும் இதுவே.