பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தலைமாட்டில் இருந்த விசிறியை மெல்ல எடுத்து, அவருக்கு இதமாக விசிறத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் 'கொர், கொர் என்ற குறட்டை ஒலி தியாகராஜனின் காதைக் குளிர வைத்து, தம்பியை தட்டி எழுப்பி, 'வா வா சீக்கிரம் வா என்று கைஜாடை காட்டிக் கொண்டே சினிமா சென்ட்ரலை நோக்கி நீட்டினான் கம்பி! அந்தக் காலத்தில் பேசும் படம் ஏது? அது ஒர் ஊமைப்படம்; அடிதடிச் சண்டைகள் நிறைந்த படம். அண்ணனும் தம்பியும் அதை ஆனந்தமாகப் பார்த்து அனுபவித்து விட்டு வீடு திரும்பினார்கள். வழியில், 'டேய் கோவிந்தராஜா, ஜாக்கிரதை அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது; தெரிந்தால் அவ்வளவுதான்!” என்று தன் முதுகையும் அவன் முதுகையும் தொட்டுக் காட்டி எச்சரித்து வைத்தான் தியாகராஜன். என்ன எச்சரித்து வைத்து என்ன பயன்? தம்பி கோவிந்தராஜன் தன் அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துத் துரங்க ஆரம்பித்ததுதான் தாமதம், 'உம், அடி உதை குத்து' என்று உளற ஆரம்பித்துவிட்டான் எதற்கு? தன் அபிமான நட்சத்திரமான விட்டலைத் துக்கத்தில் அல் ட உற்சாகப்படுத்தத்தான்! எப்படி இருக்கும், தியாகராஜனுக்கு 'டேய், சும்மா இருடா' என்று மெல்ல அவனை அதட்டிப் பார்த்தான். அவனோ, "ஒரே நாக் அவுட், ஆளே காலி' என்று 'ஓ'வென்று கத்த ஆரம்பித்தான் 'இதென்ன வம்பு, இந்தப் பயல் நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவான்போல் இருக்கிறதே? " என்று பயந்த தியாகராஜன், 'டேய் கோவிந்தராஜா பேசாமல் துங்குடா!' என்று மீண்டும் பல்லைக் கடித்துக்கொண்டே சொல்லிப் பார்த்தான். ஊஹூம்; "ஆ, அப்படிப்போடு உம், இப்படிப் பிடி' என்றான் அவன், அப்போதும் தன் உளறலை நிறுத்தாமல்: