பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அதற்குள் விழுந்த திரை உயர்ந்தது. அணைக்கப் பட்ட விளக்குகள் மீண்டும் குபிரென்று எரிந்தன. பசியால் துடிக்கும் தன் குழந்தை லோகிதாசனைச் சமாதானம் செய்து கொண்டே சந்திரமதி தர்ப்பைப்புல் அறுக்கும் காட்சி மறுபடியும் தொடர்ந்தது. திடீரென்று 'ஆ' என்று ஒர் அலறல்; அம்மா! பாம்பு, பாம்பு!பாம்பு என்னைக் கடித்து விட்டது. அம்மா என்று கதறிக் கொண்டே ஒரு காலைப் பிடித்து நொண்டிய வாறு கீழே சாய்ந்தான் லோகிதாசனான தியாகராஜன்! அவன் கீழே சாய்ந்தானோ இல்லையோ, 'ஐயோ , என் மகனே!' என்ற புலம்பல் அந்தக் கொட்டகையின் முகட்டை எட்டி, வெளியே ஊடுருவி எதிரொலித்தது! அடி வயிற்றிலிருந்து பீறிக்கொண்டு வந்த அந்தப் புலம்பல் யாருடையது என்கிறீர்கள்? சந்திரமதி வேடம் தாங்கியவருடையதா? இல்லை; 'கூத்தாடிப் பிழைக்கத் துணிந்த தன் அருமை மகன் தியாகராஜனை லோகிதாசன் வேடத்தில் பார்த்துக் களிக்க வேண்டுமென்று வந்திருந்த சாட்சாத் மாணிக்கத்தம்மா ளுடையது தான்! கொட்டகையில் மீண்டும் ஒரே பரபரப்பு; எல்லோரும் அந்த அம்மாள் இருந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். 'என்ன? என்ன அம்மா, நடந்தது?" சுற்றி நின்று மூலைக்கு மூலை கேட்டதுதான் மிச்சம்; பதில் சொல்ல மாணிக்கத்தம்மளுக்குப் பேச்சு மில்லை, மூச்சுமில்லை!