பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தாயினும் கோயிலிங்கேது?... யார் என்ன சிகிச்சை செய்தும், யார் என்ன தேறுதல் சொல்லியும் மாணிக்கத்தம்மாளின் மூர்ச்சை தெளிய வில்லை. 'அம்மா, அம்மா இதோ பார், அம்மா! நிஜமாக என்னைப் பாம்பு கடிக்கவில்லை, அம்மா! நிஜமாக நான் செத்துப் போகவில்லை, அம்மா உயிரோடு தான் இருக்கிறேன்; இதோபாரேன்!” என்று சாட்சாத் தியாக ராஜனே மேடையை விட்டு இறங்கிவந்து தன் அம்மாவின் முகத்தைத் தொட்டுத் திருப்பிய பிறகுதான் அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். பாவம், 'அரிச்சந்திரா நாடகத்தின்படி பரமசிவன் 'ரிடபவாகன ரூடராய் வந்து தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கு முன்னரே அவன் தன்னுடைய தாயாருக்காகத் தனக்குத் தானே உயிர்ப்பிச்சை அளித்துக் கொள்ள வேண்டியதாயிற்று வேறு வழி? அதற்குமேல் அம்மாதிரி கட்டங்கள் ஏதுமில்லாத தால் நாடகம் இனிதே நடந்து முடிந்தது. இரவு மணி பத்து இருக்கும்; திரு.எப்.ஜி. நடேசய்யரின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் தங்கள் குழந்தை தியாகராஜனை அழைத்துக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி தம்பதியர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, 'நில்லுங்கள் என்று அவர்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது; இருவரும் நின்று திரும்பிப் பார்த்தார்கள். திரு பொன்னுவய்யங்கார் அவர்களை நோக்கி அவசரஅவசரமாக வந்து கொண்டிருந்தார். அந்த நாளில் பிரசித்தி பெற்ற பிடில் வித்வானா யிருந்து வந்தவர் அவர்; அத்துடன் சங்கீத வாத்தியாரும்கூட. 'இவர் ஏன் தங்களை நிற்கச் சொல்லவேண்டும்?" என்று ஒன்றும் புரியாமல் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் நின்றதும் பொன்னு வய்யங்கார் விடுவிடுவென்று வந்து