பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மறைவில் நின்று எட்டி எட்டித்தான் பார்ப்போம். ஏன்? பயமா? அப்படியொன்றும் இல்லை; அதற்கு அவசியமும் இருக்க வில்லை. நாங்கள் அவரை மனமாற நேசித்தது போலவே அவரும் எங்களை மனமாற நேசித்துத்தான் வந்தார். ஆனாலும் ஏனோ தெரியவில்லை. அவர் எங்களால்கூட அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவராயிருந்தார்' இந்தக் காலத்தில் எந்தத் தம்பியாவது இப்படி யிருக்க நீங்கள் பார்க்கிறீர்களா? அதற்காக அந்த நாலு கிணற்றுத்தண்ணிக்கும் முருங்கைக் காய் சாம்பாருக்கும் உள்ள சம்பந்தத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர்களால் முடிய வில்லை; அம்மாவை ஒரு நாள் மெல்ல நெருங்கி, 'அம்மா, அம்மா! நாலு கிணற்றுத் தண்ணி, நடுக்கிணற்று உப்புத் தண்ணி, என்று அண்ணா பாடிக்கொண்டு வரும் போதெல் லாம், என்னடா நாளை மத்தியானம் முருங்கைக்காய் சாம்பார் வைக்கவேண்டுமா? என்று நீங்கள் கேட்கிறீர் களே, அது ஏன் அம்மா!' என்று தங்கள் விழிகளில் ஆசை பொங்கக் கேட்டார்கள். அவளும் அவ்வளவு சுலபமாக அந்தக் கதையை அவர்களிடம் சொல்லிவிடவில்லை. 'போங்கடா, அதெல்லாம் உங்களுக்கு ஏன்?" என்று கேட்டு அவர்களை விரட்டினாள். 'அம்மாதானே, அடித்தால்கூட வலிக்காது!’ என்று எண்ணியோ என்னவோ, 'அம்மா, அம்மா சொல், அம்மா? அம்மாஅம்மா சொல் அம்மா?' என்று அவர்கள் அவளைக் கெஞ்சு, கெஞ்சு' என்று கெஞ்சினார்கள். அதற்கு மேல் அவள் சொன்னாள். 'சங்கீத வித்வான் சூசையாப்பிள்ளையை உங்க ளுக்குத் தெரியுமல்லவா?” 'தெரியும்'