பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பாகவதருக்கோ அந்த உற்சவத்தில் தாமும் ஒரு தடவையாவது பாடவேண்டும் என்று ஆசை. அதற்காக ஒரு சமயம் அவர் ஒரு நாள் அல்ல; இரண்டு நாட்கள் பெரு முயற்சி செய்தார். அதன் பேரில் 'எண்ணிப் பதினைந்தே நிமிடங்கள்தான் நீர் பாடலாம்; அதற்கு மேல் பாடக்கூடாது. என்ன, சம்மதமா?' என்று உற்சவ நிர்வாகிகள் அவரைக் கேட்டார்கள். "ஆத்ம சாந்திக்கான ஆராதனைக்காகத்தானே, அது போதும்' என்றார் பாகவதர். அதற்கு மேல் அவருக்குப் பாட அனுமதி அளிக்கப் பட்டது. அப்போது பகல்மணி பன்னிரண்டு; நல்ல உச்சி வேளை. பசி எல்லோருடைய வயிற்றையும் கிள்ளிக் கொண்டிருந்தது. பாகவதர் பாட ஆரம்பித்தார். அவர் பாடத்தொடங்கியதிலிருந்து கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த நிர்வாகிகள் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் ஆனதும், 'நிறுத்தும்' என்றனர். அவ்வளவுதான்; நிறுத்தாதீர்கள்' என்று கூட்டத் திலிருந்து ஒரு குரல் கணிரென்று ஒலித்தது. அதைத் தொடர்ந்து பல குரல்கள்: 'மேலே பாடுங்கள்' 'நிறுத்தவேண்டாம்; மேலே பாடுங்கள்' பாகவதர் என்ன செய்வார் பாவம், நிர்வாகிகளின் முகார விந்தங்களைப் பரிதாபத்தோடு பார்த்தார். அவர்களோ, இதற்குத்தான் உம்மைப் பாட அனுமதிக்க முடியாது என்று நாங்கள் அப்போதே சொன்னோம்; கேட்டீரா? இப்போது அவர்கள் சொல்வதை நாங்கள் எப்படிக் கேட்காமல் இருக்கமுடியும் பாடித் தொலை யுங்கள்!' என்பதைப் போல் அவரைப் பார்த்தனர். பாகவதர் தொடர்ந்து பாடினார். ஒரு மணிநேரம் அல்ல; மூன்று மணிநேரம் தொடர்ந்து பாடினார். செவிக்கு