பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 20

இந்த நாட்டின் பாதைகள எலலாம திறந்த திமிங்கிலத்தின் வாய்கள்! என் தலைக்கு மேல் தொங்கிய கூர்வாள் அறுந்து வேகமாக விழுந்து கொண்டிருக்கிறது. நாளைய விடியலைப்போல் என் சாவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

நெடுமுடி:

蓝一 参 曼· & அதிர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறாய்! தொலைக் காட்சிப்பெட்டியில் தடங்கலுக்கு வருந்துகிறோம். என்ற அறிவிப்புக்கு முன் திரையில் தெரியும் தாறுமாறான காட்சிகளைப்போல் உன் உள்ளம் தெளிவற்றிருக்கிறது. நீ கொஞ்சநேரமாவது துங்க முயற்சி செய்!

பெண்:

ஒரு மெல்லிழையில் தொங்கி ஊசலாடும் சிலந்திப்பூச்சியைப்போல் எனக்குஉலகில் எஞ்சியிருக்கும் ஒரே உறவு என் மாமா! ஜலந்தரில் இருக்கிறார். அவருமஉயிரோடிருக்கிறாரா. என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது.