பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எல்லாம் தமிழ்


தில் காதல் சிறக்கும். ஆகவே அவன் காதல் இன்பத் திலும் திளைத்தான். கற்புடைய மட மங்கையர் பலருக்குக் கணவனாக இருந்தான்; அவருடைய காதல் இன்பத்தை நன்கு நுகர்ந்தான். அவனிடம் அறச் செயல் சிறந்து நின்றது; பொருளிலும் அவன் சிறந்து விளங்கினான் ; இன்ப நிலையில் உயர்ந்தோங்கினன்; வீட்டு நெறியையும் மறவாமல் கடவுளிடம் அன்பு பூண்டொழுகினான்.

இவற்றையெல்லாம் காரிகிழார் நன்றாக உணர்ந்து கொண்டவர். அவருக்குத் தமது சாதுரியத்தால் சிறிது நேரம் அமைச்சரையும், புலவரையும், அரசரையுங்கூடக் கலக்கமடையச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அதை நிறைவேற்றும் சமயத்தை எதிர் பார்த்திருந்தார்.

2

அரசவையில் அன்று பெருங்கூட்டம். திருக் கோயில்களிலிருந்து இறைவன் திருவருட் பிரசாதத்தை ஏந்தி வந்த பெரியார் பலர் அங்கிருந்தனர். வேள்விகளை முடித்துக்கொண்டு, அவை நிறைவேற உறுதுணையாக இருந்த மன்னனை நேரிலே கண்டு ஆசிகூற அந்தணர் பெருமக்கள் பலர் வந்திருந்தனர். பாண்டிய மன்னனது ஆணைக்கு அடங்கி ஒழுகுவதாக முறியெழுதிக் கொடுத்த மன்னர்களின் பிரதிநிதிகள் பலர் அங்கு அமர்ந்திருந்தனர். அரசனுக்கு உறவினர்களும் அமைச்சர்களும் நண்பர்களும் குடிமக்களில் தலைவரான வர்களும் விஜயம் செய்திருந்தனர். ஆடல் மகளிரும் பாடற்பாணரும் கூடி யிருந்தனர். செந்தமிழ்ச் சான்றோராகிய புலவர் பலர் வீற்றிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/44&oldid=1529181" இலிருந்து மீள்விக்கப்பட்டது