பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

37

 தனர். அந்தப் புலவர் கூட்டத்திடையே காரிகிழாரும் அமர்ந்திருந்தார்.

அங்கே நடந்த பேச்சு அவ்வளவும் அரசனுடைய பலவகைப் புகழைப் பற்றியதாகவே இருந்தது.

"இந்த அரசர் புகழ் இமயத்துக்கு வடக்கிலும், குமரிக்குத் தெற்கிலும், கீழ் கடலுக்குக் கிழக்கிலும், மேல் கடலுக்கு மேற்கிலும் பரவி நிற்கிறது' என்றார் ஒருவர்.

"அந்த எல்லே இந்த உலகத்தளவிலே அமைந்த தல்லவா ? மன்னர்பிரான் புகழ் மூன்று உலகத்திலும் பரவியதாயிற்றே ! பூலோகத்தின் கீழே பாதாள லோகத்திலும் இவர் புகழ் பரவியிருக்கிறது. மேலே கோலோகத்தளவும் சென்றிருக்கிறது" என்றார் மற்றொருவர்.

"எங்கே போனாலும் நம் மன்னர் பிரானுடைய ஆணை கண்டு அச்சமும், ஆற்றல் கண்டு புகழும் நிறைந்திருக்கின்றன." என்று சுருக்கமாகச் சொன்னார் ஒருவர்.

"சக்கரவர்த்தியின் செங்கோலுக்கு அஞ்சுவார் அஞ்சுக. அது எப்போதும் துலாக்கோலைப்போல நடு நிலையிலே நிற்பது. நியாயப்படி நடப்பவர்கள் அதற்கு அஞ்ச வேண்டுவதில்லை" என்று வேருெருவர் தம் கருத்தை உரைத்தார்.

" நம் அரசர் பகைவரை வெல்ல வெல்லப் பரிசிலருக்குத்தான் யோகம். எவ்வளவு நாடுகளை இப்பெருமான் அடக்கினாலும், அவற்றால் வரும் பொருளைப் புலவருக்கும் பாணருக்கும் கூத்தருக்கும் வாரி வழங்குவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/45&oldid=1529182" இலிருந்து மீள்விக்கப்பட்டது