பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் செய்த சோதனை

75



வெகுளி, இன்னுச் சொல் என்ற நான்கும் இன்றி அறம் செய்ய வேண்டுமென்று திருக்குறள் சொல்கிறதே. உங்கள் தலைவர் தமிழருமை அறிந்தவரே. ஆலுைம் வெகுளியை விலக்கவில்லை. அவர் எங்கள் சர்க்கரையிடம் பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொல்லி அவர் தம் ஊருக்குச் சென்று விட்டார்.

5

தொண்டை நாட்டுப் புலவரின் மனத்தில் ஆணுார்ப் புலவரின் செயலும் சொல்லும் உறுத்திக் கொண்டே இருந்தன. மரியாதையற்ற காரியத்தைச் செய்துவிட்டுக் கோபம் வரக் கூடாதென்று சொல்வது முட்டாள்தனம் அல்லவா?’ என்று எண்ணினர். எப்படியாவது அந்தப் புலவரையும், அவருக்கு அவ்வளவு இறுமாப்பு உண்டாகும்படி செய்த சர்க்கரையையும் அவமதிக்கவேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உண்டாகிவிட்டது.

புலவர் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார். ஆணூருக்குப் போய்ச் சேர்ந்தபோது, முன்பு அறிந்திருந்த புலவர் அவரை வரவேற்றார், சர்க்கரையின் முன் அழைத்துச் சென்றார். இன்னுரையும் புன்னகையும் கொண்டு சர்க்கரை புலவரை வரவேற்றார். விருந்து அருந்தச் செய்தார்.

தொண்டை நாட்டுப் புலவருக்குச் சர்க்கரையைச் சோதிக்க வேண்டும் என்ற நோக்கம் மேலிட்டது. அவ்விடத்துப் புலவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், "உங்கள் தலைவர் பொறுமை நிறைந்தவர் என்பதை நான் எப்படி அறிவது?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/83&oldid=1529521" இலிருந்து மீள்விக்கப்பட்டது