பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à # * = குறள் வழி என்னருமைத் தம்பி, தங்காய்! அன்பு வணக்கம் இருவருக்கும். சாதிப்பற்று என்கிற நச்சுப் பொய்கையில் பருகோம். மொழி வெறி என்கிற ஆட்கொல்லியைப் பறித்து உண்ணுேம். இந்தியர் என்கிற ஒருமை உண்ர்ச்சி யோடு மக்கள் இனத்தை உருவாக்கப் புறப்படு வோம். ' - இம் முடிவிற்கு வந்து விட்டீர்களா? மகிழ்ச்சி. இம் முடிவு உண்மையானதாக இருக்குமா?நெஞ்சின் ஆழத்திலேயிருந்து பொங்கி எழுமா? ஆம்.ஆம் என்று வாக்களிக்கிறீர்கள். அப்படித்தானே ! மகிழ்ச்சி. காலப்போக்கு’ என்று இதை ஒப்புக்கொள்ள வேண்டாம். பாராட்டிற்கு, இக் கால வழி இது: என்று இதை ஏற்காதீர். மானிடம் பிழைப்பதற்கு இதுவே வழி' என்று உணர்ந்து ஏற்பீர். சிந்தித்து, சிந்தித்து வாரும் இம் முடிவிற்கு. எண்ணித் துணிக, இக் கொள்கையை ஏற்க. நாட்டால் இந்தியர்; இனத்தால் மக்கள்’ என்பது உண்மையான இலட்சியமாகட்டும். இந்த இலட்சிய ஒலி, உதட்டளவோடு நிற்கலாமா? ஆகாது, குரல் அளவோடு நிற்கலாமா? ஆகாது, ஆகாது. பின் எந்த அளவிற்குச் செல்ல வேண்டும்? நம் உள்ளத்தோடு கலந்து,உயிரோடு கலந்து நம்மை நடத்த வேண்டும். அதுவே நாமாகிவிடவேண்டும். பொன் - பலரும் அறிந்த ஒன்று: பலரும் விரும்பும் ஒன்று. ஏன்? அது ஒளிவிடுகிறது. காண் போரைக் கவர்கிறது. எப்போது? மாற்றுக் குறை யாதபோது: பசும்பொன்னைபோது. பொன் மின்னுவது மேற்பூச்சினலா? இல்லை. பின் எதல்ை? உள்ளொளியால்; தூய உள்ளொளியால்.