பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 பொன் கற்பிக்கும் பாடம் என்ன? மாற்றுக் குறையாவிட்டால், நம் இலட்சியமும் ஒளிவிடும். எனவே. நம் இலட்சியம், மாற்றுக் குறையா மல் இருப்பதாக. பாராட்டு, புகழ், ஆசை ஆகிய கலப்படம் இல்லாமல் ஒளிரட்டும் நம் இலட்சியம். ஒளிவிடும் மக்கள் இனத்தைக் காண விரும்பு கிருேம். ஒன்றுபட்ட மக்கள் இனத்தை உருவாக்கத் துடிக்கிருேம். இவ் விருப்பமும் துடிப்பும், உண்மை யாக ஒளிரட்டும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும். அவ்வாக்கு, கேட்போரைப் பிணிக்கும். பிணித் தாரைப் பின்பற்றச் செய்யும். எனவே, இலட்சி யத்தை, உள்ளத்தில் உண்மையாக ஏற்றுக்கொள் தம்பீ! -- - சாதிப்பற்றும், பகுதிப் பாசமும், நிறவெறியும் நீடித்த கடுநோய்கள். நாங்கள் பல்லவ நாட்டவர், நீங்கள் பாண்டிய நாட்டவர் என்பது, நெடுநாள் ஊறிப்போன பிரிவினை நினைப்பு. அவர்கள் சேர நாட்டவர், இவர்கள் சோழ நாட்டவர் என்பதும் புரையோடிப் போன சிதைவு நினைப்பே! மெளரிய நாட்டவர் பாரீர், கலிங்க நாட்டவர் காணிர்’ என்பது அதே தன் மையதாகும். இத்தகைய, பகுதி வாதங்களால் அல்லவா அன்று அன்னியர்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம்? இத்தகைய பகுதி வாதங்கள் அல்லவா நம்மைத் தாக்கும் அளவு அண்டை நாட்டானுக்குத் துணிச்சலைக் கொடுக் கிறது? சிற்றரசுச் சிந்தனைகள்-பகுதிப் பாசங்கள் வரலாற்றுத் தொடக்கத்தோடு தொலைய வேண் டாவா? இப் பிள்ள்ைப்பருவ நினைப்புகளைத் தொடர விடலாமா? விரைவிலே நீக்க வேண்டாவா இவற்றை? -