பக்கம்:எழிலோவியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


9

முன்கரை கூந்தல்! கொட்டை
முந்திரி முதுகு! கண்கள்
சின்னமா வெதும்பல்!பொக்கைச்
சிரிப்புவாய் கரும்புச் சொத்தை!
மின்னல்சேர் கார்கா லத்து
வெண்மதி முகத்தின் தோற்றம்!
என்னென்பேன் கிழவி காட்டும்
எழிற்காட்சி சிரிப்புத் தானே!
     

10


       
டிய கொடிகள் தோறும்
அழகிய பூக்கள்! பூவைத்
தேடிய வண்டின் பாட்டோ
செந்தமிழ்! மலரைக் கொய்ய
நாடிய மங்கை நல்லாள்
முழுநிலா! காந்தள் நீட்டி
வாடிய மலர்கண் டஞ்சும்
வாடாத மலரைப் பாரீர்!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/17&oldid=1397930" இலிருந்து மீள்விக்கப்பட்டது