பக்கம்:எழிலோவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



க ட ல்

1

ருக்குக் கிழக்கே உள்ள
மணல்மேட்டுத் தென்னை, புன்னை
வேரினை அலைக்கும் நீல
விரிகடல் ! விளையாட் டிற்குப்
போரிடும் சிறுவர் போலப்
புரண்டிடும் அலையின் கூட்டம் !
வார்குழல் நெளிவாம் நீல
மறிகடல் பரப்பே தம்பி !

2


ன்னீர்மை உள்ளாய் ! நாட்டில்
உயிரழித் தடக்கிக் காத்து
முன்னீர்மை அடைவாய் ! நாட்டு
முதிர்பொருள் நன்செய் புன்செய்
உன்னீர்மை ஆகும் ! எந்த
உயிருமுன் படைப்பே யாகும் !
முன்னீர்மை உடையாய் என்றே
முந்நீரென் றுரைத்தார் மக்கள் ?

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/34&oldid=1301964" இலிருந்து மீள்விக்கப்பட்டது