பக்கம்:எழிலோவியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

6

டுப்பினில் புளிக்காக் கூழே
கொதித்திடும்; அழும்பிள் ளைக்குத்
துடுப்பினைத் தூக்கிக் காட்டித்
தேற்றுவாள்; இடது கையின்
மடுப்பினில் தலையை வைத்து
வயிறொட்டித் தூங்கும் ஆளன்.
நெடுப்பினில் உழைத்த தோளில்
நெஞ்சமும் கண்ணும் சேர்ப்பாள் !

7


ப்பிய வயிற்றைத் தூக்கி
ஒருபையன் ஓடி வந்தான்;
சப்பிய பனங்கொட் டையோ ?
தலையோ? என் றையங் கொண்டேன்!
'குப்பனா தேடு கின்றீர் ?
என்றனன்; குறும்பாய், 'உன்றன்
அப்பனை !' என்றேன்; தேம்பி
அழுதனன் அப்பன் இல்லான் !

8


கூனரி வாட்கைக் கொண்டு
குறுக்கிட்டாள் ஒருத்தி; என்னை,
"ஏன்சாமி ? என்ன சாமி ?
எதுவேண்டும் ?' என்றாள்; 'சேரி
வான்கண்ட பயிர்போல் வாழ
வழிவேண்டும் !' என்றேன்; கொம்புத்
தேன்கண்டாள் எனினும் என்சொல்
செவிக்கொள்ள வில்லை தம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/40&oldid=1301827" இலிருந்து மீள்விக்கப்பட்டது