பக்கம்:எழிலோவியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

6

  
சாலையில், குளத்தில், தோப்பில்
இடிந்திட்ட வீட்டுச் சந்தில்,
மாலூட்டிக் கொள்ளை கொண்ட
தலைவனின் விரிந்த மார்பை,
நூலிடை நெஞ்சை, அன்னோன்
நொடிப்பினைப் பிரித்த சாவின்
வேலையை மக்கட் கென்றும்
கல்லறை விளக்கிக் கூறும் !

7


பாயலில் ஓணான் போலத்
தலையினைத் தூக்கிப் பார்த்து
வாயினைச் சப்பிக் காட்டி
மலர்நகை பிள்ளை காட்டத்
தாயினைப் பிரித்த சாவின்
கொடுமையை, வஞ்சந் தன்னை
வாயிலில் வருவோர்க் கெல்லாம்
கல்லறை விளக்கிக் கூறும் !

8


வாடையால் தீய்ந்த மொட்டு
மலராது மலர்தல் போல
ஓடையில், கடலோ ரத்தில்
உரமிட்டு வளர்த்த காதல்
கூடாது மக்கி வாழ்ந்தோர்,
குறுக்கிட்டுப் பிரித்தோர் பண்பை,
ஏடுபோல் மக்கட் கென்றும்
கல்லறை எடுத்துக் காட்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/72&oldid=1299750" இலிருந்து மீள்விக்கப்பட்டது