பக்கம்:எழில் உதயம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 எழில் உதயம்

துண்பங்களும் இறைவியின் அருளைத் துணையாகக் கொண்டால் வருத்தத்தை உண்டாக்காமல் உரம் இழந்து நிற்கும்.

நரகம் பெறினும்

எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா’

என்று மாணிக்கவாசகர் பாடுவார்.

ஆனந்தமாக நின்ற தேவி மனிதர்களைச் சைதன்ய முடைய பொருளாக ஆக்குகிருள். அவர்களுடைய மனத் தில் அறிவாக நின்று தெளியச் செய்கிருள். ஞானமே உருவாகிய எம்பெருமாட்டி அறிவுக்கு அறிவாய் நின்று ஆன்மாக்களை உய்யக் கொள்கிருள். பிற பொருளை அறிவ. தற்குக் கருவியாகிய அறிவாக நிற்கிருள்; தன்னை அறிவதற். குரிய வாலறிவாக நிற்பவளும் அவளே.

ஆனந்தமாய் என் அறிவாய். அடுத்தபடி அம்மையை,

நிறைந்த அமுதமுமாய்

என்கிருர்,

அம்ருதம் என்ற வடசொல் அமுதம் என்று வந்தது. அச்சொல், மரணத்தைப் போக்குவது, மரணம் இல்லாதது என்ற பொருள்களைத் தரும். பொதுவாக அமுதம் என்ருல் தேவர்கள் உண்ட தேவாமுதத் தையே நாம் நினைக்கிருேம். அம்ருதம் என்ற சொல்லின் பொருளாகிய மரணத்தைப் போக்குவது என்பது தேவாம்ருதத்துக்குப் பொருந்துமா என்பதை ஆராய வேண்டும். தேவர்கள் சாவாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அமுதத்தைக் கடைந்தனர்: உண்டனர். அதற்கு முன்பெல்லாம் மனிதர்களைப்போல் இன்ன காலம் என்று இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/114&oldid=546271" இலிருந்து மீள்விக்கப்பட்டது