பக்கம்:எழில் விருத்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S{} கடலோரம் தென்னை இசைக்கப் பனைமா ஆர்க்கத் தேங்கும் கழியோரம் புன்னை சிரிக்கத் தாழை மணக்கப் புதரில் அடைகாக்கும் அன்னைக் குருகின் முன்னர்க் கொஞ்சும் ஆணாம் பெருநாரை ! சின்ன நண்டுக் குஞ்சு பதுங்கச் - சிரிக்கும் கடலோரம் ! . 3 குந்தி அன்னை குளிர்கால் சுவைக்கக் குழந்தை மணல்தோண்டச் - சிந்தும் கிளிஞ்சல் சிறுவர் பொறுக்கத் திரைகால் உடல் நனைக்க முந்தும் அலைகள் கரையைத் தாவி மோதி முரசார்க்கச் - சிந்தைக் கின்பம் வாரி வழங்கும் திரைபாய் கடலோரம் ! 4 தளிர்த்த புல்லும் செடியும் கொடியும் சமைத்த சிலையோடும் t, , குளிர்ந்த நிழலும் மணஞ்சேர் மலர்கள் குலுங்கும் பூங்காவும் நெளிந்த நீல அலைகள் நல்கும் நெடுநீர் இளங்காற்றும் . . . அளிக்கும் இன்பம் ! ஒலிவான் பாடல் அளிக்கும் கடலோரம் ! - 5