பக்கம்:எழில் விருத்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் - 67 வில்லொத்த புருவத்தார் கன்னியரின் அருகில் விடிவளவும் விழித்திருக்கும் சிறுவிளக்குத் தனித்தே பல்லொத்த முருங்கைப்பூ பாய்விரிக்கும் தெருவில்; பரனேறும் வெண்பூனை, எலியோடிப் பதுங்கும்; இல்லடங்கா திருக்கின்ற இளங்காளை எருமை இரவினிலே ஒன்றிரண்டு கட்டுகயி றறுத்தே கொல்லையிலே பயிர்மேயும்; கொட்டகையைக் குறுகும்; கொடுமைக்கும் அழிவுக்கும் நீபொறுப்பா இரவே? 6 காக்கைநிற நள்ளிரவே! கதிரில்லா உலகே! கட்டுடலின் சோர்வகற்றி உயிரூக்கும் மருந்தே! சேக்கையிலே கண்மூடிச் சீராட்டும் திருவே! செயல்மறக்கும் உடல்மறக்கும் இடம்மறக்கும் இனிமைப் போக்களிக்கும் நற்றாயே! உனையாரே விரும்பார்? பொதுமையெனப் புகல்கின்றார்; ஆனாலும் உனைப்போல் காத்தளிக்க வல்லாரோ? வேற்றுமையைக் களைந்தே கைகொடுக்கும் நற்றுணையே! வாழியகார் இரவே! 7 விண்ணெழுந்த மீனினத்தை, விடிவெள்ளி நிலவை, வெறிக்காற்றில் தேய்ந்தாடி மலைச்சாரல் விளைந்த கண்ணெழுந்த நீள்முங்கில் பெருந்தீயை அறிவோர் கண்டார்கள்; இருள்கிழிக்கக் கண்டாரே விளக்கை; மண்ணெழுந்த உயிரினத்தின் சிந்திக்கும் அறிவை வாழ்த்துகிறேன்; வளரட்டும். ஆனாலும், உலகில் எண்ணெழுந்த பல்கோடி ஆண்டுகளாய் இரவே இருக்கின்றாய்; கன்னியைப்போல் இருக்கின்றாய் நிலைத்தே 8