பக்கம்:எழில் விருத்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 79 இன்ப வாழ்க்கையில் இரண்டறக் கலந்துமே யெங்கும் அன்பு வாழ்க்கையை அடைவதே உயிரின ஆக்கம் ! துன்ப வாழ்க்கையின் தொடக்கமே தனிக்குடி, வேண்டாம் என்று ரைத்துநீ குடிசெயா திருப்பதும் முறையோ? r 6 கூசு கின்றனர் குமரிகள் குயிலிளம் பிள்ளாய் ! காசு நாண் மலர் பிறப்பெனும் வெண் டளைக் கவியோ? மாசு போக்கிய வீணையில் வடித்திடு பாட்டோ? - பேச வாய்த்தவுன் வாய்மொழிப் பெற்றியைக் கண்டே! r 7 கிள்ளை போலுனைக் கிளிமொழிக் குமரிகள் கூண்டில் தள்ளிப் பாலொடு மிகுபழம் தந்துமே வளர்த்துக் கள்ளை மீறிடு பேச்சினைக் கற்றிட விழையார் கொள்ளை யின்பமாம் உன்மொழிக் கூற்றுணர்ந் தோர்க்கே! - 8