பக்கம்:எழில் விருத்தம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாணிதாசன என்தந்தை என்தந்தை என்தந்தை என்றே எழுதுகின்ற வேளையிலும் எண்ணுகின்ற போழ்தும் தென்னவர்கள் தமிழ்காத்த சிறுத்தையின் மக்கள் தெரிகின்றார்! ஆனாலும் என்தந்தை போல அந்நாளில் இருந்தாரோ என்கின்ற அய்யம் அகத்திலெழும்; அவர்பேச்சோ என்காதில் கேட்கும்! எந்நாளும் என்ளருகில் ஏதேதோ பேசி - இருப்பதைப்போல் களாக்காண்பேன் கனவும் ஒரு கானல்! இளவளதில் தாயற்றுத் தத்தளித்த போழ்து . யார்யாரோ எனைத்துக்கிச் சிரிப்பூட்டப் பார்த்தார்! தளதளத்த என்பாட்டி 'அம்மாயி' என்றன் . - தனிச்சொத்து நானவளின் தணியாத காதல்! உளத்தினிலே குடியேறிப் போன அவள்காட்சி உயிர்பிரியும் வேளையிலும் நான்மறக்க மாட்டேன்! வளர்த்த அவள் எனைப்பிரிந்தாள்! அவளன்புச் சாயல் மாறாத பெருங்கனவு கனவும் ஒரு கானல்: இளமைக் காலம் . . . என் தந்தை பிரெஞ்சு அரசாங்க அலுவலர்; அவர் ஒற்றை மாட்டு வண்டியிலேயே தம் அலுவலுக்குச் செல்வார்; அடம் பிடித்து அவரோடு வண்டியிலே செல்வேன்; அவர் போகும்போது வரும்போதும் எனக்கு உறக்கம் வரும் வரை கதைகள் பல சொல்வார். அவரோர் திருமாலன்பர். அவர் ஆண்டாள் திருப்பாவைப் பாடல் வரிகளில் ஒரு சிலவற்றை எனக்குச் சொல்லிக் கொடுத்த துண்டு. . . . . . . ; - என் அன்னையின் மறைவுக்குப் பின் அய்ந்தாண்டுகள் கழித்து என் அன்னையின் நெருங்கிய