பக்கம்:எழில் விருத்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 95 ஆங்கில வகுப்பை அசட்டை செய்ததை இன்று நினைத்து வேதனைப் படுகின்றேன். தமிழ், பிரெஞ்சு வகுப்புகள் ஒன்றைக்கூட நான் விட்டதில்லை. 1933 ஆம் ஆண்டின் இறுதியில் வில்லியனூரில் என்னுடன் படித்த முஸ்லீம் நண்பர் மஜீது தொடர்ந்து படிக்க வசதியின்மையால் வீட்டிலிருந்தே தமிழாசிரியர் தேர்வுக்குப் படிக்க எண்ணி தமிழ்ப்பாட நூல்கள் வாங்கினார். எனக்கும் அந்த நூல்களே துணைப்பாடம் ஆகையால் எனது கல்லூரித் தமிழ் அறிவை அந்த முஸ்லீம் நண்பர்க்கு அவ்வப்போது பகிர்ந்தளிப்பது வழக்கம். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உண்டாயிற்று. வியாழன், ஞாயிறு ஆகிய வாரத்தின் இரண்டு விடுமுறை நாட்களிலும் இது நிகழும். - நினைத்துப் பார்க்கின் சாதிமத வேறுபாடுகள் வேரூன்றி யிருந்த அந்தக் காலத்திலும் என் தந்தையார் எனக்கு ஆத்தீகப் பற்றை ஊட்டியிருந்த போதிலும் எனக்குச் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய விருப்பு வெறுப்புகள் கிடையாது. எல்லா மத மாணவர்களும் என்னுடன் பயின்ற காரணத்தால் அந்தப் பொது நோக்கு ஏற்பட்டிருக்கலாம். நான் முஸ்லீம் கிருத்துவ மாணவத் தோழர்களோடு நெருங்கிப் பழகி அவர்கள் வீடுகளில் உணவும் உண்டிருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் என் தந்தைக்குத் தெரியாது. நான் தாயற்ற பிள்ளை என்பதாலும் கண்டித்தால் கோபித்துக் கொண்டு உணவுண்ண மாட்டேன் என்பதாலும் என் தந்தை தெரிந்தும் தெரியாதவர் போன்றே நடந்து கொள்வார். நண்பர் மஜீத் வறுமையின் காரணமாக அஞ்சல் பட்டுவாடா செய்யும் தொழிலை ஆங்கிலேயர் ஆட்சிக்குட் பட்டிருந்த சென்னை மாநிலம் விக்கிர வாண்டியில் ஏற்றார்.