பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9 ஒரங்கநாடகங்களையும்,இலக்கியச் சிந்தனைகளையும் கொடுத்தன. எழுத்தாற்றல் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தன. பிற்காலத்தில் இலக்கிய மேதைகள் எனப் பெயர் பெற்ற - சாதனைகள் புரிந்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், சி. சு. செல்லப்பா ஆகியோரின் ஆரம்ப &"శ} எழுத்துக்கள் இப்பத்திரிகைகளில் தான் வெளி வந்தன. பின்னர் மணிக்கொடி மாதமிருமுறை வெளிவரும் கதைப் பத்திரிகையாகப் புது உருவம் பெ ற் ற து . பி. எஸ். ராமையா அதன் ஆசிரியரானுர். மேலே குறிப்பிட் -டுள்ள எழுத்தாளர்களும், மற்றும் மெளனி, க.நா. சுப்ரமண்ய ம், ந. சிதம்பரசுப்ரமண்யன், கி. ரா. முதலியவர்களும் - பின்னர் 4. மணிக்கொடி எழுத்தாளர்கள் ' எனப் பெயர் பெற்ற பலரும் நல்ல சிறுகதைகளை இப்பத்திரிகையில் எழு தி னு ர் க ள், மணிக்கொடி உலக இலக்கியக் கதைகளையும், இந்திய மொழிகளின் கதைகளையும் தமிழாக்கிப் பிரசுரித்தது. அந்நாட்களில் எழுத்தாளர்கள் இப்போது போல் அதிகம் பேர் இல்லை. பத்திரிகைகளும் அதிகம் இ ல் லே. இருந்த பத்திரிகைகளும் எழுத்தாளர்களுக்கு சன்மானம்' என்ருே, அன்பளிப்பு என்ருே எ துவு ம் தந்ததில்லை. தாக்கூடிய நிலையில் இருந்ததுமில்லை. ஒவ்வொரு பத்திரிகையும் உயிர் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலமை தான் இருந்தது. இருப்பினும், எழுத்தாளர்கள் கொள்கைப் பிடிப்போடும் லட்சிய தாகத்தோடும் எழுதிக் கொண்டிருந்தார்கள். கல்லூரிப் படிப்பு படித்தவர்களும், பார்த்த உத் தி யோக த் ைத