பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

 எல்லாம் சித்திரிப்பது. வர்க்கக் கண்ணுேட்டத்துடன் வாழ்க்கையின், சமூகத்தின், சிக்கல்களை விளக்குவது.வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்வதற்கு, மக்கள் விழிப்புற்று - சிந்தித்துச் செயலுக்கம் பெறுவதற்கு நம்பிக்கை ஒளி காட்டுவது . . .

எந்த முறையில் எழுதினாலும், மனிதாபிமானத்துடன் எழுத வேண்டும். மனித உள்ளத்தை மேனிலைப்படுத்தக் கூடியதாக எழுத்து அமைதல் நல்லது. படிப்பவர்களின் எண்ணத்தை உயர்த்துவதாக, வாழ்க்கை நலம் பெற ஏற்றதாக இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும் தனது கவிதை பயன்பட வேண்டும்என்று விரும்பினார் மகாகவி பாரதியார்.

எழுத்துலகத்தின் பொதுவான குறிக்கோள் இதுவாக அமைத்திருப்பது நல்லது. ஆனால், தற்காலப் பத்திரிகைகள் இந்த நோக்கை ஆதரிக்கவில்லை. .

இன்றையப் பத்திரிகைகள் பண்பாட்டுச் சிதைவுக்கும் சீரழிவுக்குமே வகை செய்கின்றன. மக்கள் கலாசாரத்தைமண்ணாக்கும் விதத்திலேயே கதைகள் கட்டுரைகள். கவிதைகள், நாவல்கள் சித்திரங்களை எல்லாம் வெளியிடுகின்றன.

இன்றையப் பத்திரிகைகள் வணிக நோக்கில் செயல்பட்டு, மக்கள் மத்தியில் சீரழிவுப் போக்குகளை வேகமாகப் புரப்புகின்றன.

புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படுகிற எழுத்தாளர்கள்