பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இவர் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற இலட்சியத்தோடு முழு நேர எழுத்தாளராகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். மேலைநாட்டு தலை சிறந்த நவீன இலக்கியப் படைப்பாளிகள்போல் இந்தியாவிலும் தமிழகத்திலும் விளங்கவேண்டும் என்பது இவரது கனவு. ஆனால், அந்தக் கனவு நிறைவேறாமல் போனதால்தான் மணிக்கொடியில் தமிழில் எழுத வந்தார். உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத்தார்களான முல்க்ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயணன் ஆகியோரின் படைப்புகள் மீது இவருக்கு எந்த உயர்ந்த அபிப்பிராயமும் கிடையாது.

"மார்க்லிய அழகியல்" பார்வையுடைய முல்க் ராஜ் ஆனந்த்தை இவர் ஒரு தரமான இலக்கியவாதியாக அங்கீகரித்ததே இல்லை! காந்தியவாதியான ஆர்.கே. நாராயணனைப் பற்றிக்கேட்டால் "ஏதோ எழுதுகிறார்; சுமாராக எழுதுகிறார்; பரவாயில்லை!” என்று கூறுவது இவரது வழக்கம்.

எனவே, க.நா.சு. மார்க்ஸிய அழகியல் எழுத்தாளர்களை மதிக்கவும் இல்லை. காந்திய தத்துவத்தை பின்பற்றி எழுதிய படைப்பாளர்களுக்கு உரிய மரியாதையையும், கெளரவத்தையும் வழங்கவுமில்லை. எடுத்துக்காட்டாக மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ். ராமையாவை ஒரு சிறந்த படைப் பாளியாக க.நா.சு. ஏற்றுக்கொள்ளவில்லை !

“பி.எஸ். ராமையா ஒரு நல்ல கதை கூட எழுதவில்லை அவற்றில் இலக்கியத்தரம் ஏற்றி வைப்பதற்கில்லை! கதைக்கருத்தால், விஷயத்தால் முக்கியத்தும் தந்து கொள்ளலாம் ; இலக்கிய ரீதியில் முக்கியத்தும் கிடையாது. ராமையா கதைகள் பொதுவாக, இந்த ரகத்தைச்சேர்ந்தவை என்கிறார். க.நா.சு. (பார்க்க சி.சு.செல்லப்பா "என் இலக்கிய பாணி" பக்கம் 262)

ஆனால், தலை சிறந்த மணிக்கொடி கதாசிரியர்களில் ஒருவராக, பி.எஸ். ராமையாவைப் புதுமைப்பித்தன் அங்கீகரித்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (காண்க : புதுமைப்பித்தன் கட்டுரைகள்).

சுருங்கச்சொன்னால் க.நா.சுவின் இலக்கியப் பார்வையானது கொள்கை அடிப்படையாலும் நடைமுறை ரீதியாகவும் ஒரு குறுகிய