பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

கேட்பதும், அது தெரிந்து, பிறகு நாம் காட்டும் சரக்கை அவரது அளவுகோல்படிகாட்டிவிளக்கம் கேட்டு வாதுக்குப் போவதும்தான் முறையாக இருக்கும்.

- என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரி; அப்படியானால் விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும்? இந்தக் கேள்விக்கும் தமது கடிதக் கட்டுரையில் விளக்கம் அளித்திருக்கிறார் அவர்.

"க.நா.சுதன்கட்டுரையில்தான்கருதும் சிறந்த தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களைப் பொறுக்கியது சம்பந்தமாக போதிய ஆதாரங்கள் கொடுத்து விளக்கி இருக்கிறாரா என்று பார்க்கப் போனால் அதிலும் ஒரு நிறைவேற்றம் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருப்பதில் குறிப்பிடத்தக்கது சோதனை என்ற விளக்கம். இலக்கியத்தில் சோதனை என்றால் என்ன என்று கேட்பது வேறு விஷயம். சோதனைக்காரர்கள் என்பதற்குக் க.நா.சு கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நான் மேலே செல்கிறேன்.

க.நா.சு குறிப்பிட்ட இந்த பதினாறு பேர்களும் எவ்வித சோதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்விளக்கியிருந்தால் அவர் பட்டியலை ஏற்க மறுக்க உதவி இருக்கும். ஏற்பது மறுப்பது என்று சொல்லும்போது இலக்கிய ரீதியாக அவர்களுக்குத் தரக்கூடிய ஒரு ஸ்தானத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

'புதுமைப்பித்தன்' செய்த சோதனைகள் அதிகம். வெற்றி தோல்விகளும் அதிகம். 'கு.ப.ரா. செய்த சோதனைகள் குறைவு; அந்த அளவில் வெற்றி அதிகம்’. ‘மெளனியின் கதைகளில் இதுவரை தமிழில் காணக் கிடைக்காத ஆழம்' காணப்படுகிறது. 'பிச்சமூர்த்தி ஆரம்ப காலத்தில் கவிதை நிரம்பிய சோதனைகளை நடத்தினார். கி.ரா.வின் சிறு கதைகளை பாடப் புஸ்தகச் சிறுகதைகள் என்றே சொல்லலாம். (இன்னும் அடுக்கலாம்) ஆகிய வரிகள் விமர்சன ரீதியாக, குறிப்பிடப்பட்ட எந்தச் சிறுகதை ஆசிரியரையும் பற்றி எவ்வித ஆதாரத்துடனும் மதிப்பிட உதவக்கூடியதாக படவில்லை.

நண்பர் க.நா.சுவிடம் நான் அடிக்கடி நேரில் கூறிக்கொள்ளும் புகார் ஒன்று உண்டு. அதையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

141