இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
——————————————————————————————வல்லிக்கண்ணன்
'இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும்விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று' என்று செல்லப்பா சொன்னார்.
அவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.